ஜெமினிகணேசனுக்கு கடைசி வரை நிறைவேறாத அந்த ஆசை! கல்யாணம் பண்ணியும் இப்படியா?

X
ஜெமினிகணேசனுக்கு கடைசி வரை நிறைவேறாத அந்த ஆசை! கல்யாணம் பண்ணியும் இப்படியா?

பிஎஸ்சி. கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பை முடித்து இருந்த ஜெமினிகணேசனுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று தீராத ஆசை. எப்படியாவது டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று அவர் நினைத்து இருந்தார். ஆனால், அவரது குடும்ப சூழ்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் தான் திருச்சியைச் சேர்ந்த ஒரு கான்ட்ராக்டர் ஜெமினிகணேசனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பது குறித்து அவரை சந்திக்க வந்தார்.

கணேசனைப் பார்த்த உடனே அவருக்குப் பிடிச்சிப் போனதால கணேசனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைப்பது என்று முடிவெடுத்து விட்டார். அவர், கணேசனிடம் நீங்க மேல படிக்கணும்னு ஆசைப்பட்டதாக கேள்விப்பட்டேன். அந்தப் படிப்புச் செலவை எல்லாம் நான் ஏத்துக்கறேன். உங்களை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு என்றார். இதைக் கேட்ட உடனே ஜெமினிகணேசன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

அதன் காரணமாகவே உடனடியாக அந்த திருமணத்துக்கு ஒப்புதல் தெரிவித்தார். 1940 ஜூன் 30ம் நாளன்று ஜெமினிகணேசனுக்குத் திருமணம் நடந்தபோது அவரது வயது 19. அப்போது அவரது மனைவியின் வயது பதினான்கரை. அவர் எந்த டாக்டர் படிப்பைப் படிக்க வேண்டும் என்ற ஆவலோடு திருமணம் செய்து கொண்டாரோ அந்த ஆசை மட்டும்தான் அவரது வாழ்நாள் முழுக்க நிறைவேறவில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்.

ஒரு சில இடங்களில் வேலை பார்த்ததுக்குப் பின்னாலே அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. திரை உலகில் அவர் பெரிய ஹீரோவாகவும் உயர்ந்தார். ஒரு காலகட்டத்துல அவர் காதல் மன்னன் ஆனார்.