என்னங்கப்பா… கோட் படத்துக்கு அஜித் ட்ரெண்ட்டில் இருக்காரு… சேதி என்ன தெரியுமா?

by Akhilan |
என்னங்கப்பா… கோட் படத்துக்கு அஜித் ட்ரெண்ட்டில் இருக்காரு… சேதி என்ன தெரியுமா?
X

vijay Ajith

Ajith: பெரிய எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் முதல் நாளிலே அஜித்தை டிரெண்ட் செய்து மாஸ் காட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய், பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் போல நான் இல்ல.. ஓபனாக பேசிட்டாரே!…

இப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. அதற்கு ஏற்ப படக்குழு கொடுத்த ஒவ்வொரு பேட்டிகளிலும் புகழ்ந்துள்ளனர். இதனால் படம் அப்படி இருக்குமோ எப்படி இருக்குமோ என பல சிந்தனைகள் ரசிகர்களிடம் ஓடிக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு மணி நேரத்தையும் எண்ணிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்று படம் வெளியாகி தீனி போட்டு இருக்கிறதா என்பது தனி கதை தான்.

Goat

ஆனால் விஜய்யின் படத்திற்கு அவரைக் கொண்டாடுவதற்கு பதில் தற்போது ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர். அதற்கு படக்காட்சி ஒன்று காரணமாக கூறப்படுகிறது. இருந்தும் அதை ஸ்பாய்லராக இங்கு வெளியிட வேண்டாம் என்பதால் டுவிட்டரில் நடக்கும் இன்னொரு விஷயம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

#AJITHTheFaceOfKollywood என்ற ஹேர் டேக் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. இதில் அஜித் ரசிகர்கள் விஜய் தேவையில்லாமல் அஜித்தை போன்று காப்பியடிப்பதாகவும் கூறி வருகின்றனர். இனிமேல் கோலிவுட்டை விடாமுயற்சி திரைப்படம் தான் ரிலீஸ் ஆகி காப்பாற்ற வேண்டும் என்ற பதிவுகளையும் பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க: ரியல் மங்காத்தா ஆடுனது நம்ம வெங்கட் பிரபுதான்… கோட் படத்தின் Honest Review

இந்நிலையில், பல வருடம் கழித்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இப்படி சண்டையிட்டுக் கொள்வது நடந்துள்ளது. தமிழகத்தில் முதல் ஷோ மட்டுமே முடிந்திருக்கும் நிலையில் சண்டை இன்னும் தீவிரமாகும் என்றும் கமெண்ட்கள் பறந்து வருகிறது.

Next Story