கோட் படத்தால் திடீர் முடிவெடுத்த தக் லைஃப் டீம்… இது நல்ல இருக்கே!…

Published on: September 18, 2024
---Advertisement---

Thuglife: கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தக்லைஃப். தற்போது இப்படத்தின் படக்குழு இன்னொரு முடிவை கோட் திரைப்படத்தால் எடுத்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் முதலில் திரிஷா, ஜெயம்ரவி, துல்கர் சல்மான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இருவரும் அடுத்தடுத்து அப்படத்தில் இருந்து விலகினர்.

இதையும் படிங்க: விக்ரமுடன் பல கெட்டப்புகளில் நடித்த சசிக்குமார்!.. அட யாருக்கும் தெரியாம போச்சே!…

இதை தொடர்ந்து அந்த கேரக்டரில் மற்ற பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த கேரக்டர் நீக்கப்பட்டு தனியாக ஒரு கேரக்டரை உருவாக்கி சிம்புவை படத்தில் கொண்டு வந்தனர். இன்னொரு கேரக்டரில் அசோக் செல்வன் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்து இப்படத்தின் ஷூட்டிங் கோவா மற்றும் சென்னையில் நடக்க இருக்கிறதாம். சமீபத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடையியேயான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டதாம். 

இதையும் படிங்க:  மீனாவை அடித்த சிட்டி… கோபி போட்ட சபதம்… ராஜியிடம் சண்டையிட்ட கோமதி!

இந்நிலையில் இப்படத்தில் நடிகை திரிஷாவை நடனம் ஆட வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. அதாவது கோட் படம் போல ஒரு பாடலை உருவாக்கி ஆட வைப்பது படக்குழுவின் திட்டமாக இருக்கிறதாம். பொங்கல் அல்லது சம்மர் விடுமுறையில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.