Cinema News
பிரபல மலையாள நடிகரை கோட்டில் களமிறக்க நினைத்த வெங்கட் பிரபு… ஆனா?
GoatMovie: பிரபல நடிகர் விஜயின் நடிப்பில் உருவாக இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் மலையாளத்தின் பிரபல நடிகர் ஒருவரை களமிறக்க திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் உடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, அஜ்மல், மீனாட்சி செளத்ரி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆபரேஷன் முடித்தும் கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் பாடி சாதனை படைத்த எஸ்.ஜானகி!..
படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக விஜயின் ஒரு கேரக்டர் வில்லனாக இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்திருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வரும் ஏப்ரல் 14ந் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
பிரண்ட்ஷிப் பாடலாக இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான வினித் ஸ்ரீனிவாசனை நடிக்க வைக்க வெங்கட் பிரபு முயற்சி செய்ததாக அவரை தன்னுடைய ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் நிறைய படங்களுக்கு நோ சொல்லி இருக்கேன்.
இதையும் படிங்க: டேனியல் பாலாஜியின் மரணம்.. கோயிலில் நடந்த அதிசயம்! கதிகலங்கி நிற்கும் ஆவடி மக்கள்
எனக்கு தமிழில் நடிக்க ஆசை இருந்தது இல்லை. தமிழ்நாட்டுக்கு வந்தால் தனிமை கிடைக்கும் என ஆசைப்பட்டேன். ஆனால் இப்போ அந்த எண்ணம் மாறி வருகிறது. மற்ற மொழி டைரக்டரிடம் கத்துக்கலாம் என நினைக்கிறேன். கடந்த வருடம் எனக்கு கோட் படத்தின் வாய்ப்பு வந்தது. நோ சொல்லவில்லை.
ஆனால் என்னுடைய வருஷங்கள் ஷேஷம் ஷூட்டிங் இருந்தது. விட்ற கூடாதுனு தோணுச்சு. நான் நடிக்கிற படங்கள் என்றால் சொல்லி விட்டு சென்று இருப்பேன். ஆனால் நான் இயக்கும் படம் என்பதால் கோட் படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது. சரோஜா படத்தினை பார்த்து தான் நான் டைரக்டராகவே மாறினேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.