அமீர் நடிச்சா பிரச்சனை... சூர்யா இப்படி சொன்னா எப்படி? தனுஷ் வெயிட்டிங்க்ல இருக்காராமே!

by sankaran v |   ( Updated:2024-12-01 06:05:33  )
ameer dhanush surya
X

ameer dhanush surya

அமீர், சூர்யா, தனுஷ், வெற்றிமாறன், வாடிவாசல் குறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பாருங்க.

மொக்கை படம்

தமிழ்ல வருஷத்துக்கு 250 படம் வருது. இதுல 20 படம் கூட சொல்லிக்கிற மாதிரி இல்ல... மத்த எல்லாமே மொக்கை படம் தான். அப்படின்னா ஏன் எந்தப் படத்துக்குமே மக்கள் ரியாக்ட் பண்ணாம கங்குவா படத்துக்குப் பண்றாங்கன்னு கேட்கலாம். நீங்கள் அனைவருமே சேர்ந்து ரிலீஸ்சுக்கு முன்னால பெரிய பில்டப் கொடுத்தீங்க.

பில்டப்

Also read: சூர்யாவுக்கு சூனியம் வச்சிட்டாங்களா!.. அதுவும் அந்த நடிகர்களா?.. என்னென்ன சொல்றாரு பாருங்க..

2000 கோடி இந்தப் படம் வசூல் பண்ணும். நாங்க 50 லாங்குவேஜ்ல ரிலீஸ் பண்றோம். 10 ஆயிரம் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணப் போறோம். அப்புறம் சூர்யா ஒருபக்கம் பில்டப் கொடுக்காரு. இந்தியாவே வாயைப் பொளந்துக்கிட்டுப் பார்க்கும்.

மக்கள் நம்புறாங்க. சூர்யா வெறும் நடிகர் சூர்யா இல்ல. சிவகுமாரின் மகன். அப்படின்னா உங்க மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. 'வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்' என்கிற மாதிரி சிவகுமார் குடும்பம் பொய் சொல்லாதுன்னு மக்கள் நம்புறாங்க.

வாயைத் தொறந்தாலே பொய்

அப்போ நீங்க என்ன பண்றீங்கன்னா மக்களை சீட் பண்ணிட்டீங்க. அதனால மக்கள் ரியாக்ட் பண்றாங்க. அப்புறம் ஸ்டுடியோ கிரீன்ல தனஞ்செயன்னு ஒருத்தர் வேலை பார்க்குறாரு. அவரு வாயைத் தொறந்தாலே பொய் தான். இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் அவர் பேசிய வீடியோக்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால் தெரியும். அவர் எவ்வளவு பொய் சொல்லி இருக்காருன்னு.

இவர் ஒரு ஆளைப் பாராட்டுனாருன்னா அதுல சுயநலமான ஒரு நோக்கம் இருக்கும். அது நமக்குத் தெரியும். மக்களுக்குத் தெரியுமா? ஒரு தயாரிப்பாளர் இன்னொரு தயாரிப்பாளரோட படத்தை ரொம்ப சிலாகிச்சி நல்லாருக்குன்னு சொன்னா மக்கள் நம்புவாங்க. அப்படி நம்பி தியேட்டர்ல போய் காசு கொடுத்து ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்தாங்கன்னா கோபப்படாம என்ன செய்வாங்க?

தடை போட முடியாது

அதுக்கு நாம ஒண்ணுமே பண்ண முடியாது. அதை தடை போடவும் முடியாது. இன்னொன்னு காசு கொடுத்துப் படம் பார்க்குற எல்லாருக்குமே அந்தப் படங்களை விமர்சிக்கிற உரிமையும் இருக்கு. அதுல எந்த மாற்றமும் இல்லை என்கிறார் வலைப்பேச்சாளர் பிஸ்மி.

அமீர் நடிக்கிறதை விரும்பல

vadivasal

vadivasal

சூர்யாவின் 46வது படமாக வாடிவாசல் இருக்கும். அதுக்கு முன்னாடி ஆர்.ஜே.பாலாஜியின் படம் இருக்கும் என்று தெரிகிறது. ஞானவேல் ராஜா என்ற சூர்யாவின் உறவினர் வெற்றிமாறனை நேரில் பார்க்கணும்னு போயிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் அமீர் நடிக்கிறதை சூர்யா சார் விரும்பலை. அதை அவர் சொல்ல சொல்லிருக்காருன்னு மெதுவாக சொல்கிறார்.

உங்களுக்குப் பிடிக்கலன்னா நீங்க தான் எங்கிட்ட சொல்லணும். அதை எதுக்கு மூணாவது ஆள் மூலமா சொல்லணும்னு வெற்றி மாறன் கடுப்பாகிட்டாராம். சூர்யாவைப் பொருத்தவரை வாடிவாசல் படத்தில் அமீர் நடிப்பது அவருக்கு இடைஞ்சலாக இருக்கிறது.

சூர்யா - தனுஷ்

Also read: அந்த படத்தின் இரண்டாம் பாகமா? இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா

அதனால அவரை அந்தப் படத்தில் இருந்து தூக்கணும் என்று முயற்சி செய்துக்கிட்டே இருக்காரு. ஆனா வெற்றிமாறன் அதற்கு உடன்பட மாட்டாரு. ஏன்னா அந்தக் கேரக்டருக்கு அமீர் தான் பொருத்தம். இந்தப் பிரச்சனையால் சூர்யா வேணா வெளியேற வாய்ப்பு இருக்கு. அந்தக் கேரக்டருக்கு தனுஷ் ரெடியா இருக்காரு. இந்த விஷயத்தையும் பிஸ்மி பகிர்ந்துள்ளார்.

Next Story