கவுண்டமணி, செந்திலின் அந்த காமெடி… வயிறு வலிக்க சிரித்த விகே.ராமசாமி!

X
கவுண்டமணி, செந்திலின் அந்த காமெடி… வயிறு வலிக்க சிரித்த விகே.ராமசாமி!

நல்ல ஒரு ரசிகன்தான் நல்ல கலைஞனாக இருக்க முடியும்னு சொல்வாங்க. அதுக்கு உதாரணமாக இருந்தவர்தான் வி.கே.ராமசாமி என்று ஒரு கட்டுரையில் கமல் பதிவு செய்துள்ளார். ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் பத்திரிகையாளர் வி.கே.ராமசாமியைப் பார்த்துக் கேட்டார். இப்ப வருகிற படங்களில் நகைச்சுவை எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

இப்ப எல்லாம் என்ன நகைச்சுவை வருது? சிரிக்கவே முடியல. படங்கள்ல எல்லாம் ஆபாசமா பேசிக்கிட்டு இருக்காங்க. அப்படின்னு எல்லாம் விகே.ராமசாமி சொல்வார் என்பது அந்த பத்திரிகையாளரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் விகே.ராமசாமி அவர்களுக்கு சொன்ன பதில் முற்றிலும் வித்தியாசமான ஒன்று. நீங்கள் நகைச்சுவையைப் பற்றி கேட்டதால வெளிப்படையா சொல்றேன்.

இன்னைக்கு கவுண்டமணியும், செந்திலும் என்னை மிஞ்சி விட்டார்கள் அப்படின்னு சொல்வேன். ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப வெவ்வேறு விதமாக சொல்லி என்னை வயிறு வெடிக்க சிரிக்க வைத்த அவரோட வாழைப்பழ காமெடியில் நான் அசந்தே போனேன் என்று அந்த நிருபரிடம் சொன்னார் வி.கே.ராமசாமி.

அப்போ அந்தப் பக்கமாக வந்த கமல், உங்களை மாதிரி சீனியர் நடிகர்கள் இந்த மாதிரியான நடிகர்களை எல்லாம் பாராட்டும்போதே கேட்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உங்களுடைய பாராட்டு அந்த நடிகர்களுக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சியைக் கொடுக்கும்னு நினைச்சிப் பாருங்க என்றார் கமல். அதற்கு, கலைஞர்களைப் பொருத்த வரைக்கும் இன்னொரு கலைஞர் அவர்களைப் பாராட்டறதை விட மிகப்பெரிய பரிசு என்ன இருக்க முடியும்? என்று சொல்லி விட்டுச் சென்றாராம் விகே.ராமசாமி.