டி. ராஜேந்தர் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா!..

மறைந்த நடிகர் கே. பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கன்னடத்து பைங்கிளி படத்தின் புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

tr

கே. பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள கன்னடத்து பைங்கிளி படத்தின் புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சிங்கம் புலி, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை எம்பிஎம் எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இசைஞானி இளையராஜா முதல் முறையாக பாடியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், டி. ராஜேந்தரும் கே. பாக்யராஜும் இணைந்து பணியாற்றிய ஒரே திரைப்படம் என்ற சிறப்பையும் கன்னடத்து பைங்கிளி பெற்றுள்ளது.

படத்தில் நாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் வரும் பாக்யராஜ் முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இணைந்து நடித்துள்ள படமும் இதுவாகும். அதிலும் இருவரும் கணவன், மனைவியாகவே நடித்துள்ளனர்.

மேலும், அறிமுக நடிகர்கள் அமல் அஜித் மற்றும் ஆதியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், பிரபல யூடியூபர்கள் தங்கபாண்டி, தீபக், சிவா உள்ளிட்ட ஐந்து பேர் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.

1990களில் ஓசூர் மற்றும் தமிழ்நாடு, கர்நாடக எல்லைப் பகுதியில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சாய் ரமணி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CR
ஆசிரியர்

adminram

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →