சக்கர பொங்கலுக்கு வடகறியா?.. கவினுக்கு ஜோடி இந்த நடிகையா?.. பூஜையே போட்டுட்டாங்களே!..

கவின் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் கேட்கும் நடிகராக மாறிவிட்ட நிலையில், சில கோடிகள் மட்டுமே கேட்கும் கவினுக்கு பல பட வாய்ப்புகள் தற்போது வரிசை கட்டி காத்திருக்கின்றன. டாடா படத்தின் வெற்றியை பார்த்து விட்டு கவினுக்கு குவிந்த பட வாய்ப்புகள் தான் இதெல்லாம் என்கின்றனர்.

அவரும் கிடைக்கும் பட வாய்ப்புகளை எல்லாம் அள்ளி போட்டுக் கொண்டு சரியான கதை மற்றும் இயக்குநர்களை கூட சரியாக தேர்வு செய்யாமல் நடித்ததன் விளைவு தான் ஸ்டார் படத்தின் தோல்விக்கு காரணம் என்கின்றனர். அடுத்து நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார்.

இதையும் படிங்க: இங்க நான் தான் கிங்கு!.. சந்தானத்துக்கு சரியான சங்கு!.. கவின் பட முதல் நாள் வசூல் கூட வரலையே!

அந்த படத்தின் படப்பிடிப்பே கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறுகின்றனர். அடுத்து நயன்தாராவுடன் இணைந்து கவின் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் ‘மாஸ்க்’ படத்துக்கான பூஜையை கவின் போட்டுள்ளார். கவினுக்கு ஜோடி ஆண்ட்ரியாவா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தான் ஆங்கிலத்தில் பட தலைப்புகளை வைத்து வருகிறார்கள் என்று பார்த்தால் கவினும் லிப்ட், ஸ்டார், மாஸ்க் என அடுத்தடுத்து ஆங்கில தலைப்புகளிலேயே டைட்டிலை வைத்து வருகிறார். டாடா தலைப்பும் டாடியும் இன்னொரு வெர்ஷன் தான்.

இதையும் படிங்க: நடிச்சதோ 100.. ஹீரோயினாக 11! நீலாம்பரிக்கே டஃப் கொடுத்த நக்மா.. சுவாரஸ்ய தகவல்

விக்ராணன் அசோக் எனும் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் டார்க் காமெடி படமாக உருவாகவுள்ள படத்தில் கவினுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கப் போவதாக கூறுகின்றனர். மேலும், ருஹானி ஷர்மா, சார்லி, பால சரவணன், விஜே அர்ச்சனா சந்தோக்கி உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

நேற்று நடைபெற்ற படத்தின் பூஜையில் வெற்றிமாறன் கலந்து கொண்டு கவின் படத்தை வாழ்த்தினார். ஸ்டார் படத்திலும் சர்ப்ரைஸ் கதாபாத்திரத்தில் வெற்றிமாறன் நடித்திருப்பார். விரைவில் கவினை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கவுண்டமணி கோபப்பட்டு கத்திட்டாரு!.. நாட்டாமை பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!.. பகிரும் ரவிக்குமார்…

Related Articles
Next Story
Share it