‘கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு’! பிரபல நகைக்கடை உரிமையாளர் வீட்டு மருமகளாகும் கீர்த்தி

by Rohini |
keerthy
X

keerthy

Actress Keerthi Suresh: தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் , தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மகாநடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதை பெற்றார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகையாகவே இப்போது வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமா துறையை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகை பிரபலமாகி விட்டால் அவரை பின் தொடர்ந்து வதந்திகளும் பரவி வருகின்றன. ஏற்கனவே கேரளாவில் மிகப்பெரிய அரசியல்வாதியாக இருக்கும் ஒருவரின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அதை தொடர்ந்து துபாயில் ஒரு இளைஞருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார்.

இதையும் படிங்க: அந்த படத்தில் நடக்காத ரஜினியின் ஆசை.. முத்து படத்தால் நிறைவேறிய அதிசயம்!..

அதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் அந்த இளைஞரைத்தான் திருமணம் செய்ய போகிறார் என்றும் பேசி வந்தனர். மேலும் சிறுவயதில் இருந்தே தன்னுடன் பழகிய நண்பரை மணக்க இருக்கிறார் என்று இன்னொரு தகவல் வெளியானது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அவரது குடும்பத்தினர் இணையத்தில் ஒரு பதிவினை பதிவிட்டனர்.

இன்னொரு பக்கம் விஜய் கீர்த்தி சுரேஷ் சம்பந்தமான பல வதந்திகளும் பரவின. இந்த நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த ஒரு நகைக்கடை உரிமையாளரின் மகனை திருமணம் செய்யப் போவதாக மற்றுமொரு தகவல் பரவி வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் மிகவும் சைலண்டாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: விஜய நினைச்சா பாவமா இருக்கு!.. சரியா வராது!. எச்சரிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!…

ஏற்கனவே அந்த அரசியல்வாதியின் மகனும் கீர்த்தியும் கிட்டத்தட்ட 13 வருடங்களாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த திருமண தகவலும் எந்தளவுக்கு உண்மை என கூடிய சீக்கிரம் தெரியவரும்.

Next Story