சூர்யாவுக்கு தொடர் ஹிட்: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் சூர்யா. விஜய் தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு சென்றுவிட்டார். அஜித்தோ தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார்.. எனவே எல்லோருடைய பார்வையும் சூர்யா பக்கம் திரும்பியிருக்கிறது. சூர்யாவும் கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய 2 ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். எனவே, விஜயின் இடத்தை சூர்யா பிடிக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதற்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது என பலரும் பேசுகிறார்கள். ஒருபக்கம், அடுத்தடுத்த திரைப்படங்கள் சூர்யாவுக்கு தயாராகி வருகிறது..
சூர்யாவின் புதிய படங்கள்: சூர்யாவின் 47வது திரைப்படத்தை மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யா போலீஸ அதிகாரியாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. சூர்யாவின் 48வது திரைப்படத்தை ஏற்கனவே அவரை வைத்து ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார்.
சூர்யாவின் 49வது திரைப்படத்தை ஜனநாயகன் படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் டிசி படத்தில் நடித்த வாமிகா கபி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
சூர்யா 50: இந்நிலையில்தான், சூர்யாவின் 50வது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் கதையை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கப்போவதாக ஒரு செய்தி வெளியானது. எனவே, சூர்யாவின் 50-வது திரைப்படத்தை ஷங்கர் இயக்கினால் அது நன்றாக இருக்கும் என பேசப்பட்டது. ஆனால் தற்போது சூர்யாவின் 50வது திரைப்படத்தை இயக்கப் போவது லோகேஷ் கனகராஜ் என செய்திகள் கசிந்துள்ளது.
ரசிகர்கள் கொண்டாடிய ரோலக்ஸ்: லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே சூர்யா நடித்திருந்தார்.. ரசிகர்கள் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கொடுத்த வரவேற்பை பார்த்த லோகேஷும், சூர்யாவும் ரோலக்ஸ் என்கிற கதை பாத்திரத்தை வைத்து ஒரு முழுபடமே எடுக்கலாம் என முடிவெடுத்தனர்.. ஆனால் அது தள்ளி தள்ளி போய்க்கொண்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் விரைவில் அல்லு அர்ஜுனனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.. இந்த படத்தை முடித்ததும் அவர் சூர்யாவை வைத்து ரோலக்ஸ் திரைப்படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.







