இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திடீரென பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு சந்திப்பை நடத்தி இருக்கிறார். அதில் இதுவரை லோகேஷ் மீது வைக்கப்பட்ட பல விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார். லோகேஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதற்குப் பிறகு அவர் எந்த படத்தை இயக்கப் போகிறார்? எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பது பற்றி அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு கைதி 2 திரைப்படத்தை தான்.
ஏனெனில் அதன் முதல் பாகம் வெளியாகி ஒரு பெரிய வரவேற்பை பெற்றது. அதனால் லோகேஷ் மீது ரசிகர்களுக்கு என ஒரு தனி மரியாதையும் இருந்தது. அதற்கு ஏற்ப அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார். குறிப்பாக கமல் நடிப்பில் விக்ரம் 2 திரைப்படத்தை அவர் தந்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டுக்களையும் அதிக அளவில் பெற்றார். லோகேஷ் வந்த பிறகுதான் எல் சி யு என்ற ஒரு கான்செப்ட் வெளியே தெரிய வந்தது. அதுவும் அது ரசிகர்களால் வைக்கப்பட்ட ஒரு பெயர். அதிலிருந்து லோகேஷ் சம்பந்தப்பட்ட எந்த படங்கள் வெளியானாலும் அதில் எல் சி யு இருக்கிறதா என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கைதி2 திரைப்படம் உருவாக வாய்ப்பு இல்லை. அல்லு அர்ஜுன் திரைப்படத்திற்குப் பிறகு லோகேஷ் பெரிய சம்பளத்தை எதிர்பார்ப்பதால் கைதி 2 வரவே வராது என்றெல்லாம் பல சர்ச்சைகள் கிளம்பியது. அதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லோகேஷ். கூலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினியையும் கமலையும் வைத்து படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு வந்திருக்கிறது. இது ஒரு நல்ல வாய்ப்பு என கருதி கைதி 2 திரைப்படத்தின் நிறுவனத்தினரிடம் இந்த வாய்ப்பை நான் மிஸ் பண்ண விரும்பவில்லை.
அதனால் அந்த படத்தை முடித்து விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு ரஜினி கமலை வைத்து இயக்கும் படத்திற்கான ஸ்கிரிப்டில் இறங்கி இருக்கிறார் லோகேஷ். ஒன்றரை மாதம் கழித்து அந்த ஸ்கிரிப்ட்டை கொண்டு போய் ரஜினியிடமும் கமலிடமும் சொல்லி இருக்கிறார். தனித்தனியாகவே இருவருக்கும் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் எதிர்பார்ப்பது ஆக்சன் படம் வேண்டாம் என்பதுதான். ஒரு லைட்டான சப்ஜெக்டாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் விரும்பி இருக்கிறார்கள். அதனால் லைட் வெயிட் சப்ஜெக்ட் எனக்கு வராது என அவர் ஒதுங்கி விட்டதாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
அந்த நேரத்தில் கைதி 2க்கு கார்த்தி ஒதுக்கியிருந்த கால்சீட்டை வேறொரு இயக்குனருக்கு கொடுத்ததினால் அந்த நேரத்தில் என்ன பண்ணலாம் என யோசிக்கும் பொழுது தான் அல்லு அர்ஜுனை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு வந்திருக்கிறது. அப்படித்தான் அல்லு அர்ஜுன் படத்தில் கமிட்டானேன். அதற்குள் அதிக சம்பளம் எதிர்பார்க்கிறேன், கைதி2 வராது என்றெல்லாம் பல செய்திகள் வெளியானது. ஆனால் அப்படி இல்லை. கைதி 2 கண்டிப்பாக வரும். என்னுடைய அடுத்த படம் கைதி 2 தான்.

அதைப்போல விக்ரம் 2, ரோலக்ஸ் போன்ற திரைப்படங்களும் என்னுடைய கமிட்மெண்ட்ஸில் இருக்கின்றன. அதோடு என்னுடைய தயாரிப்பில் தயாராகும் பென்ஸ் திரைப்படமும் எல்சியூ வில் தான் வருகிறது. அதனால் எல்சியு மூடப்படவில்லை. அது ரசிகர்களால் உருவாக்கப்பட்டது. ஒரு தனி மனிதனாக என்னால் மட்டுமே அதை க்ளோஸ் பண்ண முடியாது கண்டிப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.





