ஓ இதான் கதையா? மாம்பழ விளம்பரத்துக்கு அம்மணி வாங்கிய பெத்த தொகை… 5க்கு 5ஆம்!...

by Akhilan |
ஓ இதான் கதையா? மாம்பழ விளம்பரத்துக்கு அம்மணி வாங்கிய பெத்த தொகை… 5க்கு 5ஆம்!...
X

Nayanthara: நடிகை நயன்தாரா தன்னுடைய கேரியர் ஆட்டம் கண்டுக்கொண்டு இருக்கும் நிலையில் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்திருப்பவர் தற்போது விளம்பரங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம். அதுக்கு அவர் வாங்கும் சம்பளம் தன தற்போதைய கோலிவுட் வட்டாரத்தின் ஷாக்கிற்கு காரணமாக மாறி இருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்து அழைக்கப்பட்டவர் நயன்தாரா. ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு எல்லாமே தலைகீழாக மாறியது. கிட்டத்தட்ட கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 11க்கும் அதிகமான திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. ஜவான் படம் மட்டுமே வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: டெலிட்டான காதலன் படத்தின் மியூசிக்…. யோசிக்காமல் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தரமான சம்பவம்…

இதனால் தன்னுடைய கவனத்தை பிசினஸ் பக்கம் திருப்பினார் நயன்தாரா. மேக்கப் பொருட்கள், நாப்கின் உள்ளிட்ட தன்னுடைய பிராண்ட் பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார். இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகுகிறார் எனவும் கிசுகிசுக்கப்பட்டது. கேரியர் இருக்கும்போதே அதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து இருக்கிறார் நயன்தாரா.

இதனால் தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்த நயன் இன்ஸ்டாகிராமை தொடங்கினார். அதில் போடப்படும் போஸ்ட்டுகள், படத்திற்கு செய்யப்படும் ப்ரொமோஷன்கள் என எல்லாவற்றுக்கும் ஒரு தொகையை தனியாக கறந்தார். இது ஒரு புறம் இருக்க சமீப காலமாக விளம்பரங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

அந்த வகையில் அவரின் மாம்பழ விளம்பரம் வெளியாகி வைரலானது. 50 நொடி ஓடும் இந்த விளம்பரத்திற்கு நயன் சம்பளமாக 50 கோடி வரை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு தொடர்ச்சியாக விளம்பர வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது.

இதனை தொடர்ந்து, ஐந்து நொடி ஓடும் விளம்பரமாக இருந்தால் 5 கோடி வரை சம்பளமாக கேட்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் தொடங்கி இருக்கிறது. தன்னுடைய கேரியர் இருக்கும்போதே அதை சரியாக பயன்படுத்தி பல வழிகளில் தன்னுடைய மார்க்கெட்டை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் நயன். இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ!

Next Story