திரிஷாவை ஓரங்கட்ட டாப் கியர் போட்ட நயன்தாரா!.. அந்த சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கப் போறாரா?..

Published on: May 15, 2024
---Advertisement---

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா தக் லைஃப் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா ஒப்பந்தமானார். தளபதி விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி என தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக திரிஷா அதிரடி காட்டினார். ஆனால் விடாமுயற்சி திரைப்படம் இப்போதைக்கு வராது என்பதால் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் திரிஷா நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நயன்தாராவும் பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்தாண்டு பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த உள்ள சிக்கந்தர் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்த எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஷ்மிகா மந்தனா அந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: மன்சூர் அலி கானுக்கு நெத்தியடி!.. சுசித்ராவுக்கு மட்டும் சுத்தி வளைக்கிறாரே திரிஷா?..ஏன்மா இப்படி!..

இந்நிலையில், கன்னடத்தில் கே ஜி எஃப் ஹீரோ யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் படத்தில் நயன்தாரா நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. மேலும், கவினுக்கு ஜோடியாக விஷ்ணு எடவன் இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க போவதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இது மட்டுமின்றி தற்போது மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக கௌதம் மேனன் இயக்கப் போகும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: யாருக்குமே இல்லாத அந்த சிறப்பு நதியாவுக்கு இருக்கு…! இதற்குக் காரணமே இவர் தானாம்..!

ஏற்கனவே மம்முட்டிக்கு ஜோடியாக நயன்தாரா பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா இதுவரை நடிக்காத நிலையில் முதல் முறையாக அவர் இயக்கத்தில் நடிக்கப் போதாது கூறுகின்றனர்.

இப்படி வரிசையாக தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நயன்தாரா திடீரென கமிட்டாகி வருவதற்கு காரணமே மீண்டும் தனது முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட் என்றும் திரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே பெரிய படங்களை பிடிக்கும் போட்டி நிலவி வருவதாகவும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சம்மர் சூட்டை உச்சத்துக்கு கொண்டு சென்ற கோமாளி பட நடிகை!.. டூபீஸ் உடையில் ஃபுல் மீல்ஸ் கன்ஃபார்ம்!..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.