டிமாண்ட்டி காலணி 2 ஹிட்டு!. க்யூட்டா போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்!….

Published on: August 16, 2024
priya bhavani
---Advertisement---

Priya bhavani shankar: சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்த பலரில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். சின்னத்திரை சீரியலில் நடிப்பதற்கு முன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார். அப்போதே இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். சினிமாவில் நடிக்க அழைப்புகள் வந்தும் அவர் போகவில்லை.

priya

அதற்கு காரணம் சினிமாவுக்கு போனால் கவர்ச்சி காட்ட வேண்டி வரும் என்பதால்தான். எனவே, சீரியல் பக்கம் போனார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற தொடரில் நடித்தார். அதன்பின் மேயாத மான் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

priya

அந்த படத்திற்கு பின் பல படங்களிலும் நடித்துவிட்டார். ஆனால், கவர்ச்சியான உடையணிந்து நடிக்க மாட்டேன் என்பதை இப்போது வரை கடைபிடித்து வருகிறார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், திருச்சிற்றம்பலம் போன்ற சில வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் தோல்வி படங்கள்தான்.

priya

எனவே, பிரியா பவானி சங்கர் நடித்தாலே அந்த படம் தோல்விதான் என ரசிகர்களில் சிலரும், சினிமா உலகிலும் பேச துவங்கினார். இது தன்னை காயப்படுத்துவதாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போன இந்தியன் 2 படத்திலும் பிரியா நடித்திருந்தார்.

priya

அதேநேரம், அருள்நிதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் டிமாண்ட்டி காலனி 2 படத்தில் பிரியா நடித்திருக்கிறார். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே, அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவ்வப்போது க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.