Cinema News
புஷ்பா 2 நிகழ்ச்சியில் பொங்கிய தேவி ஸ்ரீ!.. எதுக்கு அப்படி பேசினாரு?!.. தயாரிப்பாளர் விளக்கம்..!
சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 நிகழ்ச்சியில் தேவி ஸ்ரீ பிரசாத் கோபமாக பேசியதற்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்திருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் 2-வது பாகத்தை எடுப்பதற்கு முடிவு செய்து இருந்தார்கள்.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி லீக் புகைப்படங்கள்… பார்க்கவே தெறிக்குதே!… இனி அஜித்தான் எல்லாம்…
அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டு வந்தது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் டிசம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பிரீ பிசினஸ் பல கோடி ரூபாய்க்கு நடந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளில் படத்தின் டிக்கெட் விற்பனை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அது மட்டும் இல்லாமல் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. படம் நிச்சயம் முதல் பாகத்தை விட சூப்பர் சூப்பர் ஹிட் கொடுக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புஷ்பா 2 படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புஷ்பா 2 திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த கிஸ்கி என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமாரை தவிர்த்து படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அவர் மேடையில் தயாரிப்பாளர் ரவிசங்கரிடம் சற்று கோபமாக பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருந்ததாவது ‘நான் நேரத்துக்கு பாடல் கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் என் மீது குற்றம் சாட்டியிருந்தார். இப்போது கூட இந்த நிகழ்ச்சிக்கு நான் தாமதமாக வந்தேன் என்று சொல்வீர்க.ள் ஆனால் வெளியில் இருப்பவர்கள் என்னை உள்ளே விடவில்லை. அதுதான் லேட். தயாரிப்பாளர் கொடுக்கும் சம்பளமாக இருந்தாலும் சரி, ஒரு பணிக்கான கிரெடிட்டாக இருந்தாலும் சரி நாம்தான் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் கேட்கவில்லை என்றால் யாரும் நமக்கு எதையும் கொடுக்க மாட்டார்கள். தயாரிப்பாளர் என் மீது அன்பு வைத்திருக்கிறார். என்னை விரும்புகிறார். ஆனால் என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை காட்டிலும் புகார்கள் அதிகம் என்பது எனக்கு நன்றாக தெரியும்’ என்று கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பாளரிடம் இருக்கும் பிரச்சனையை ஓபனாக மேடையிலேயே பேசிவிட்டார் என்று கூறி வந்தார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் ஓனர் ரவிசங்கர் செய்தியாளர்களிடம் பேசியிருக்கின்றார். அப்போது கூறி அவர் ‘தேவி ஸ்ரீ பிரசாத் அப்படி சொன்னதில் எந்தவித தவறும் இல்லை. அவர் ஒரு சினிமா வசனத்தை போல் தான் பேசியிருக்கிறார். எங்களுக்குள் எந்த வித பிரச்சனையும் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்து வருகிறோம்.
இதையும் படிங்க: Nayanthara: தனுஷ் விஷயத்தில் மட்டுமல்ல… அப்பவே தெலுங்கு நடிகரை பங்கம் பண்ணின நயன்தாரா..!
அவர் சினிமாவில் இருக்கும் வரை எங்கள் படங்களுக்கு இசையமைப்பார். அவருடன் இணைந்து பணியாற்றுவோம்’ என்று கூறியிருக்கின்றார். புஷ்பா 2 திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதில் காலதாமதம் செய்ததால் கடைசி நேரத்தில் சாம்ஸ் அவர்களை வைத்து தான் படத்தை முடித்ததாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
அது மட்டும் இல்லாமல் தமிழில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் அவர்களின் குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள். அந்த திரைப்படத்திலிருந்தும் தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.