Cinema News
Delhi ganesh: 50 ஆண்டு கால நண்பர்…. டெல்லிகணேஷோட கனவே இதுதானாம்…. பிரபலம் சொன்ன தகவல்
குணச்சித்திர நடிகர், வில்லன், காமெடி, டப்பிங் ஆர்டிஸ்ட் என எந்த வேடம் கொடுத்தாலும் அதைக் கனக்கச்சிதமாக செய்யக்கூடியவர் டெல்லி கணேஷ். அவர் பாலசந்தரின் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம் படத்தில் தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
தணியாத தாகம்
அதன்பிறகு தணியாத தாகம் என்ற படத்திலும் ஹீரோ அவர் தான். அவர் திறமையான நடிகர். நாடகங்களில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே இந்திய விமானப்படையிலும் பணியாற்றியுள்ளார். சிறந்த நாட்டுப்பற்றாளர்.
அவரது மறைவு திரையுலகத்திற்கே பேரிழப்பு. இப்போது ஒவ்வொரு பிரபலங்களாக வந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டெல்லிகணேஷோட மகன் மகாடெல்லி கணேஷ் தந்தையைப் பற்றி துக்கம் தாளாமல் இப்படி சொல்கிறார்.
ஈடு செய்ய முடியாத இழப்பு
Also read: அரசியலுக்கு போன விஜய்!.. விஜய் சேதுபதி மகன் படத்துக்கு வந்த சிக்கல்!.. அட பாவமே!…
நேற்று நைட் கூட நல்லா தான் பேசிக்கிட்டு இருந்தார். அப்புறம் சிறிது நேரம் கழித்து அவரை எழுப்பி மாத்திரைக் கொடுக்கலாம்னு போனபோது அவரிடம் அசைவே இல்லை. அப்புறம் டாக்டர் வந்து பரிசோதித்ததும் தான் அவர் காலமானது தெரிந்தது. சாதாரணமாக உடல்நிலை சரியில்லைன்னு தான் சொல்லிருந்தாங்க. ட்ரீட்மெண்ட் எல்லாம் கொடுத்துக்கிட்டு இருந்தோம். அவரது இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாதது என்கிறார்.
பிரமிட் நடராஜன்
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன் டெல்லி கணேஷ் குறித்து இப்படி பேசியுள்ளார். காலையில டிவில செய்தியை எப்பவும் போல பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னடா டெல்லியைப் பற்றிப் போட்டுக்கிட்டே இருக்காங்களேன்னு. முதல்ல அவர் காலமானதைப் பற்றி சொல்லல. அப்புறம் தான் அவர் காலமானது தெரிஞ்சது. பேரிடியாக இருந்தது.
50 ஆண்டுகால நண்பர். 80வயசு தான். குணசித்திர வேடத்தில் அவரை மாதிரி யாரும் நடிக்க முடியாது. ரொம்ப ஆரோக்கியமான மனிதர். மிகப்பெரிய நல்ல மனிதர். எல்லாருடனும் தன்மையாகப் பழகக்கூடியவர். அவரது பையனை ஒரு ஹீரோவாகப் பார்க்கணும்னு கனவு கண்டவர் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்.
குடும்பம்
Also read: Amaran: ரஜினி படத்தையே ஓவர்டேக் பண்ண அமரன்?!… 10 நாளில் எகிறிய எஸ்கே-வின் மார்க்கெட்!…
கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் கூட இந்தியன் 2 தான். அதன்பிறகு ஒரு வெப்சீரிஸ் நடித்தாராம். இன்னும் ஒரு படம் நடித்துள்ள நிலையில் அது ரிலீஸ் ஆகாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இவர் தனது அத்தை மகளைத் திருமணம் செய்துள்ளார். 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். பேரன் பேத்திகளும் உள்ளனர் இவரது மகன் மகாதேவன் விக்ரம் படத்தில் வில்லன் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.