சூர்யா, விக்ரம் எல்லாம் இல்லை.. கர்ணனாக மாறிய ராகவா லாரன்ஸ்!.. இது லிஸ்ட்லையே இல்லையே!..
மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

மஹாவீர் கர்ணனாக விக்ரம் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. சில போட்டோக்களும், வீடியோக்களும் கூட வெளியாகின. ஆனால், அந்த படம் என்ன ஆனது என தெரியவில்லை. அதன் பின்னர், சூர்யா கர்ணனாக நடிக்கப் போகிறார் என்றனர். அவரும் கருப்பு பக்கம் வந்த பின்னர் கர்ணன் படத்தை கழட்டி விட்டார்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் 2027ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராகவா லாரன்ஸ் தற்போது பக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், அவர் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருவதாக ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க.









