Irumudi Box Office : தெலுங்கில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி தேஜா பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். சமீபகாலமாக அவர் சில தோல்வி படங்களை கொடுத்து வந்தார்.
இவர் நடித்துள்ள புதிய படம் தான் ‘இருமுடி’. இப்படம் தமிழிலும் (தமிழ் வெர்ஷன் டைட்டில் ‘இருமுடி கட்டு’) டப் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் ஆகஸ்ட் 21 அன்று இது தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.
இதில் ப்ரியா பவானி ஷங்கர் தான் கதாநாயகி. ரவி தேஜா, ப்ரியா பவானி ஷங்கரின் மகள் கேரக்டரில் பேபி நக்ஷத்ரா வலம் வந்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் சிவ நிர்வாணா தான் இயக்கியுள்ளார்.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆம்… கடந்த 5 நாட்களிலேயே உலக அளவில் ரூ.103.55 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.







