நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் முதலாமாண்டு நினைவு நாள்!

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களை தனது தனித்துவமான நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ரோபோ சங்கர்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் முதலாமாண்டு நினைவு நாள்

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களை தனது தனித்துவமான நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ரோபோ சங்கர். மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மற்றும் நகைச்சுவை கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானார்.

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை மற்றும் ரோபோ நடன அசைவுகளால் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். தொடர்ந்து அது இது எது? , கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கினார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற ரோபோ சங்கர், பின்னர் வாயை மூடி பேசவும் , மாரி , வேலைக்காரன் , சிங்கம் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இவ்வாறு சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், தனது 46-வது வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி காலமானார். மறைவுக்கு முன்பாக அவர் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். முன்னதாக மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பெற்றிருந்த நிலையில், பின்னர் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை அறிக்கையின்படி, அவருக்கு தீவிரமான இரைப்பை-குடல் ரத்தக்கசிவு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ரசிகர்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்த ரோபோ சங்கரின் மறைவு, தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது நினைவு நாளில் திரையுலகினரும் ரசிகர்களும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →