Connect with us

Cinema News

நடிக்க ஜிவி பிரகாஷ் வந்த போது நிறைய கண்டிஷன் போட்டேன்… அதை அவர் கேட்கவே இல்லை… ஓபனாக சொன்ன சைந்தவி!..

Saindhavi: கோலிவுட்டில் ஆஸ்தான தம்பதிகளாக பலம் வந்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து இருக்கின்றனர். இதனால் இவர்களின் பழைய வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் சைந்தவி தன் கணவர் குறித்து பேசி இருக்கும் ஒரு வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில் இருந்து, ஜிவி பிரகாஷும் நானும் பள்ளியிலிருந்து காதலித்து வருகிறோம். எங்களுடைய 12 வருட காதலுக்கு அடையாளமாக எங்களுக்கு திருமணம் நடந்தது. தாலி கட்டுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜிவி எனக்கு பெரிய பூங்கொத்து ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார்.  அதில் ஒரு வாழ்த்து அட்டையில் இத்தனை வருடங்களுக்கு நன்றி. பல வருடம் உன்னுடன் இணைந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…

அந்த அட்டையை இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். நான் எங்களுடைய கல்யாண புகைப்படத்தை அடிக்கடி பார்த்துக் கொள்வது வழக்கம். ஜிவி கூட கலாய்ப்பது போல ஏன் அதையே பாத்துட்டு இருக்க எனக் கேட்பார். நான் அந்த நிமிடத்தில் மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன். ஒரு புகைப்படம் எடுத்த போது என்ன நடந்தது எனக்கு நன்றாகவே நியாபகம் இருக்கும்.

 அதை யோசித்து ரசித்து கொள்வேன். ஜிவி நடிக்க சென்றபோது அவருக்கு நான் நிறைய கண்டிஷன் வரை போட்டிருந்தேன். ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என்பதும் ஒன்றாக இருந்தது. ஆனால் அவர் எதையுமே காப்பாற்றவில்லை. முதலில் அந்த படங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு சங்கடமாக தான் இருந்தது.

பின்னர் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டது. அவர்களும் இப்படி நடிக்கிறார்கள். அவர்களுடைய மனைவி எல்லாம் இதை ஏற்றுக்கொண்டு தானே இருக்கிறார்கள். அதனால் எனக்கும் போக போகாது பழகி விட்டது என குறிப்பிட்டிருந்தார். 

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்தில் விஜய், ரஹ்மான் தலையிட்டது உண்மையா? உண்மையை உடைக்கும் பிரபலம்!

google news
Continue Reading

More in Cinema News

To Top