Connect with us

Cinema News

காதலே காதலே என்னை உடைத்தேனே… கண்ணில் காதல் பொங்க மனைவியுடன் அஜித்… லீக் வீடியோ!

Ajithkumar: மொத்தமாக பொது உலகத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் அஜித்குமாரின் சமீபத்திய நிகழ்வுகள் வரிசையாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் மனைவியுடன் அவர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் கசிந்து இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார். தனியாளாக சினிமாவுக்கு வந்து கஷ்டப்பட்டு போராடி தனக்கான இடத்தினைப் பிடித்து கொண்டார். ஒரு கட்டத்தில் தன் மனதில் தோன்றிய விஷயத்தினை ஓபனாக பேசக்கூடிய தைரியம் கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க: குறைந்த பட்ஜெட்!.. ஆனா பல கோடி லாபம்!.. விஜயகாந்த் படங்களின் லிஸ்ட் இதோ!..

இந்நிலையில், அஜித் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் விடாமுயற்சி ஷூட் தொடங்கியது. அதிலிருந்து, வரிசையாக சில போட்டோ, வீடியோக்கள் அஜித் குறித்து தொடர்ந்து ரிலீஸாகி கொண்டே இருந்தது. நடிகர் ஆரவ் கூட நிறைய புகைப்படங்களை ரிலீஸ் செய்து ஆச்சரியப்படுத்தினார்.

இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் படத்துக்கு சூனியன் வச்சிராதீங்கப்பு… வெளியாகும் அப்டேட்களால் கடுப்பாகும் விஜய் ரசிகர்கள்…

புரோமோஷன் பிடிக்காத அஜித் ஏன் இதுக்கு ஒப்புக்கொள்கிறார் என பலரும் கேள்விகளை எழுப்பினர். சமீபத்தில் கூட அஜித் மருத்துவமனை போன தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. இந்நிலையில், மனைவி ஷாலினியுடன் அஜித் கேக் வெட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இது அஜித் மற்றும் ஷாலினியின் 25 வருட காதலை சொன்ன நாளுக்கான செலிபிரேஷன் எனக் கூறப்படுகிறது. நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்ட நிகழ்வில் இருந்த வீடியோ அஜித் அனுமதியுடன் தான் ரிலீஸாகி இருக்கும். அவருக்கு தெரியாமல் இதெல்லாம் நடக்காது எனவும் ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top