இசைக்கருவிகளை வாசித்து நடிப்பதில் வெளுத்துக் கட்டிய சிவாஜி… சாத்தியமானது எப்படி? அட அவரே சொல்லிட்டாரே!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப் பொருத்தவரையில் பல திரைப்படங்களிலும் பல இசைக்கருவிகளை வாசித்து இருக்கிறார். புதிய பறவை திரைப்படத்தில் சாக்ஸபோனை அந்தளவு அற்புதமாக வாசிப்பார். அடுத்து பாசமலர் படத்தில் பியானோவை அவர் இசைக்கின்ற விதத்தைப் பார்க்கும்போது ஏறக்குறைய ஒரு 25 ஆண்டுகள் பியானோவில் பயிற்சி பெற்றவர் வாசிப்பது போன்று அழகாக வாசிப்பார். அதே போலத் தான் தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாகவே மாறி நாதஸ்வரத்தை அவ்வளவு அற்புதமாக வாசிப்பார் சிவாஜி. இதை யாரால மறக்க முடியும்? […]

Thillana Mohanambal

நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப் பொருத்தவரையில் பல திரைப்படங்களிலும் பல இசைக்கருவிகளை வாசித்து இருக்கிறார். புதிய பறவை திரைப்படத்தில் சாக்ஸபோனை அந்தளவு அற்புதமாக வாசிப்பார். அடுத்து பாசமலர் படத்தில் பியானோவை அவர் இசைக்கின்ற விதத்தைப் பார்க்கும்போது ஏறக்குறைய ஒரு 25 ஆண்டுகள் பியானோவில் பயிற்சி பெற்றவர் வாசிப்பது போன்று அழகாக வாசிப்பார்.

அதே போலத் தான் தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாகவே மாறி நாதஸ்வரத்தை அவ்வளவு அற்புதமாக வாசிப்பார் சிவாஜி. இதை யாரால மறக்க முடியும்? இப்படி எல்லா இசைக்கருவிகளையும் தத்ரூபமாக வாசிக்கிறீங்களே, அந்த இசைக்கருவிகளை எல்லாம் வாசித்துப் பயிற்சி எடுத்துக் கொள்வீர்களான்னு ஒரு நிருபர் சிவாஜியிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு இசைக்கருவியை வாசிக்கிறேன். இதுக்கெல்லாம் நான் பயிற்சி எடுத்துட்டு வந்தா நடிப்புல நான் கவனம் செலுத்த முடியுமா? அதனால இதுவும் போயிடும். அதுவும் போயிடும். நான் வாசிப்பதெல்லாம் நடிப்பு. நடிப்பதைப் போல நடிக்கணும். சாக்ஸபோனை வாசிப்பது போல நடிக்கணும். நாதஸ்வரத்தை வாசிப்பது போல நான் நடிச்சேன். அவ்வளவு தான்.

அதுல நிஜமாகவே நாதஸ்வரம் வாசித்தது மதுரை சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்கள். அவர்கள் என் பக்கத்தில் இருந்து வாசித்துக் கொண்டு இருந்தாலும் கூட, நான் வாசித்ததுதான் சரி. அவர்கள் வாசித்தது தப்போ என்று தோன்றும். இதெல்லாம், என் நடிப்பு உருவாக்குகின்ற ஒரு இம்பேக்ட் அல்லது மாயத்தோற்றம். இதுதான் நடிப்பின் சிறப்பு என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜி.

CR
ஆசிரியர்

sankaran v

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →