லவ் டைட்டில் சென்டிமென்ட் இந்த வாட்டியும் ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கு வொர்க் ஆகுமா?
சௌந்தர்யா தயாரித்த ‘வித் லவ்’ படம் சூப்பர் ஹிட்டானது.

கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தயாரித்த ‘வித் லவ்’ திரைப்படம் இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸானது. அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைச்சது.
இப்போ இந்த படத்தின் டைட்டிலில் லவ்வை மட்டும் எடுத்து ‘#Love’ என்ற புதிய வெப் சீரிஸை தயாரித்து முடித்து விட்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இதில் அர்ஜுன் தாஸ் தான் கதாநாயகன் ஆக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி டூயட் பாடி ஆடியுள்ளார். இதை ‘மாரி’ பட இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.
பிரபல OTT தளமான நெட்ஃப்ளிக்ஸுக்காக ரெடி பண்ண இவ்வெப் சீரிஸை வருகிற அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதன் ட்ரெய்லர் நாளை (செப்டம்பர் 25) வெளியாகுமாம்.












