ஹிட்டு கொடுக்காமல் விடமாட்டேன்!.. அடுத்த படத்துக்கு பூஜை போட்ட அர்ஜுன் தாஸ்.. அந்த டைரக்டரா?..
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜையுடன் தொடங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. மேலும், அப்படக்குழு வெளியிட்டுள்ள பூஜை புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இப்படத்தை ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘மைக்கேல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். அர்ஜுன் தாஸ் மற்றும் ப்ரீத்தி பகதாலாவுடன் கே.எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் பாப் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் கான் சிட்டி, ஒன்ஸ் மோர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கிக்கொண்ட நடிகர் அர்ஜுன் தாஸின் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












