Cinema News
தனுஷும் என் புருஷனும் ரூம்ல என்ன பண்ணாங்க தெரியுமா?.. 12 வருஷமா டைவர்ஸ் கேட்டேன்.. சுசித்ரா பகீர்!..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தனிப்பட்ட வாழ்க்கையில் ரொம்பவே மோசமானவர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாடகியும் பிக் பாஸ் பிரபலமுமான சுசித்ரா தற்போது அளித்துள்ள பேட்டியில் பகிரங்கமாக பேசி பஞ்சாயத்தை கூட்டியுள்ளார்.
ஏற்கனவே தனுஷ் கேங்கில் அமுல் பேபி என்பதற்கு மோசமான அர்த்தம் உள்ளதாக சுசித்ரா கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பேசியது பரபரப்பை கிளப்பியது. தனுஷ் மற்றும் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் இருவரும் யாரடி நீ மோகினி படத்தின் நண்பர்களாக நடித்து இருந்தனர்.
இதையும் படிங்க: விஜய்யை விட வேகமா இருக்காரே ரஜினிகாந்த்!.. அந்த வேலையை அதுக்குள்ள முடிச்சிட்டாராம்!..
அந்த படத்திற்கு பிறகு இருவரும் நெருங்கிய நட்புடன் பழகி வந்த நிலையில், திடீரென சுச்சி லீக்ஸ் என ஆபாச வீடியோக்கள் முன்னணி நடிகர்கள் நடிகைகள் என பலரது வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுசித்ராவுக்கு பைத்தியம் என்றும் அவரது கணக்கை யாரோ ஹேக் செய்து இந்த வீடியோக்களை வெளியிட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர், இந்த பிரச்சனை காரணமாகவே கார்த்திக் குமார் மற்றும் சுசித்ரா விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் சுசித்ரா தொடர்ந்து தனுஷ் மற்றும் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி பல அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் நடிகர் தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் இருவரும் ரூமில் என்னென்ன பண்ணாரு தெரியுமா என்று கூறி பகீர் கிளப்பி உள்ளார்.
இதையும் படிங்க: 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சரத்குமார்.. 6 மாத சிகிச்சை!. அந்த படத்துக்கு அவ்வளவு கஷ்டப்பட்டாரா?!
போதைப்பொருள் உட்கொண்டு அவர்கள் நடத்தும் பார்ட்டிகள் குறித்தும் போதைப் பொருள் பயன்படுத்திய பின்னர் தான் இன்னமும் கார்த்திக் குமார் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களில் பேசி வருகிறார் என்றும் பகிர் கிளப்பியுள்ளார்.
கார்த்திக் குமார் ஒரு கே என டாக்டரே சந்தேகப்படுவதாகவும் அவர் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. சுமார் 12 வருஷமாக கார்த்திக் குமாரிடம் தான் டைவர்ஸ் கேட்டு போராடியதாக சுசித்ரா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாக்கத்தான் ரெமோ! மகன் விஷயத்தில் அந்நியனா மாறிய விக்ரம்.. ‘பைசன்’ படத்திற்காக இப்படியா?