சூர்யா 50 படத்தை இயக்கப்போவது ஷங்கர் இல்லையாம்… இவர்தானாம்!

X
சூர்யா 50 படத்தை இயக்கப்போவது ஷங்கர் இல்லையாம்… இவர்தானாம்!

சூர்யா அடுத்தடுத்து சூப்பரான கதைகளை செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். ஜித்து மாதவன் இயக்கி வரும் ‘சூர்யா 47’ வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

‘சூர்யா 48’-ஐ த.செ.ஞானவேல் இயக்க, இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘சூர்யா 49’-ஐ நம்ம ‘சதுரங்க வேட்டை’ வினோத் தான் இயக்கவுள்ளார்.

நேற்று ‘சூர்யா 50’ படத்துக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத, இயக்குநர் ஷங்கர் திரைக்கதை எழுதி இயக்கப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.

தற்போது, இது குறித்து விசாரிக்கையில் ‘சூர்யா 50’-ஐ ஷங்கர் இயக்கவில்லையாம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போகிறாராம். ‘விக்ரம்’ படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் வந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டரை வைத்து தான் இப்படத்தை பண்ணப்போகிறார் லோகேஷ்.