Connect with us
viji

Cinema News

என்னது விஜயகாந்த் உதவி செய்யலயா? நம்புற மாதிரி சொல்லுங்க – அஜித் வராததற்கு இதுதான் காரணமா

Actor Ajith: கடந்த ஒன்றரை மாதமாக அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை எதற்கு செவி சாய்க்காமல் அதை கடந்து கொண்டே செல்கிறார் அஜித். இப்படியும் ஒரு மனுஷன் இருக்க முடியுமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவருடைய நடத்தைகள் சமீபகாலமாக இருந்து வருகின்றன.

விஜயகாந்த் இறப்பிலிருந்தே அஜித்தை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். நேரிடையாக வரவேண்டாம். ஒரு சிறிய இரங்கல் செய்தியாவது போட்டிருக்கலாமே? என்றெல்லாம் கேட்டு வருகின்றனர். இது விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு வித கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: 80ஸ் குட்டீஸ்களின் உள்ளம் கவர்ந்த ஜோடி… காதலர்களுக்கு எல்லாம் ரோல் மாடல் இவர்கள்தான்!..

பைக் டூர், கார் ரேஸ், மோட்டார்ஸ் நிறுவனம் ஆரம்பித்தல் இவைகளை பற்றியெல்லாம் தன் மேலாளர் மூலமாக இணையத்தில் செய்தியை போட வைத்த அஜித் விஜயகாந்த் இறப்பு குறித்து மட்டும் ஏன் இரங்கல் செய்தியை போடவைக்கவில்லை என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

ஜெயலலிதா இறப்பிற்கு கிட்டத்தட்ட 18 மணி நேரம் பயணம் செய்து அஞ்சலி செலுத்த வந்த அஜித் துபாயில் இருந்து கொண்டே விஜயகாந்த் இறப்பிற்கு வரமுடியவில்லை. இதற்கிடையில் வெற்றித்துரைசாமி இறப்பிற்கு முதல் ஆளாக அஜித் வந்ததும் மேலும் ரசிகர்களை உசுப்பேத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: இப்பதான் ஆரம்பிச்சோம்!. அதுக்குள்ள பஞ்சாயத்தா?!.. எஸ்.கே. 22-வுக்கு வந்த சிக்கல்!..

இந்த நிலையில் வலைபேச்சு சக்திவேலுவிடம் இதைப் பற்றி கேட்டதற்கு அவர் ஒரு முக்கியமான விஷயத்தை கூறினார். இயக்குனர் பாலாவுக்கும் அஜித்துக்கும் இடையே பிரச்சினை வந்த போது அந்த நேரத்தில் விஜயகாந்த் உதவி செய்யவில்லை என்ற ஒரு கருத்து பரவலாக வந்ததாம். அதன் காரணமாகத்தான் அஜித் வரவில்லையா என்ற ஒரு பேச்சும் அடிபட்டிருக்கிறது.

ஆனால் உண்மையிலேயே அஜித் இதை பற்றி விஜயகாந்திடம் சொல்லியிருந்தால் கண்டிப்பாக விஜயகாந்த் உதவி செய்திருப்பார் என்று வலைப்பேச்சு சக்திவேல் கூறினார்.

இதையும் படிங்க: விடாமுயற்சியால் சிக்கலில் சிக்கிய ரஜினிகாந்த்… இது என்னங்க சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!…

 

google news
Continue Reading

More in Cinema News

To Top