நம்ம நடிகை த்ரிஷா நடித்து இந்த ஆண்டு (2026) ரிலீஸ் ஆன ‘கருப்பு’ அமோக வரவேற்பை பெற்று ஹிட்டானது.
தற்போது, த்ரிஷா நடிக்கும் புதிய தமிழ் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘ஏர்லிஃப்ட்’ என்ற ஹிந்தி பட புகழ் இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்குகிறார்.
இதில் முக்கிய வேடங்களில் அபர்ணா பாலமுரளி, ராதிகா சரத்குமார் நடிக்கின்றனர். இப்படம் சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகுகிறதாம்.
இதன் ஷூட்டிங் இன்று (செப்டம்பர் 2-ஆம் தேதி) முதல் லண்டனில் துவங்கியுள்ளது. இதனை ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.







