வாணவேடிக்கை படத்தின் சண்முக பாண்டியன் கேரக்டர் ப்ரோமோ!

X
வாணவேடிக்கை படத்தின் சண்முக பாண்டியன் கேரக்டர் ப்ரோமோ!

‘கேப்டன்’ விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தொடர்ந்து ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் உருவாகும் புதிய படம் தான் ‘வாணவேடிக்கை’.

இந்த படத்தை பிரபல இயக்குநர் திரு இயக்கி வருகிறார். இதை ‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரித்து வருகிறார்.

இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் டூயட் பாடி ஆடி வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, சண்முக பாண்டியனின் கேரக்டர் ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.