10 கோடியா கேட்குறீங்க!.. ஃபிரியா பாருங்க!.. வீடியோவை பகிர்ந்து தனுஷை அசிங்கப்படுத்திய விக்கி!…

Published on: November 16, 2024
dhanush
---Advertisement---

Dhanush: தற்போது தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கென தனி முத்திரை பதித்தவர் நயன்தாரா. நடிகையாக மட்டுமல்லாமல் இப்போது கைவசம் நிறைய பிசினஸ்களும் இவர் செய்து வருகிறார் .

அந்த வகையில் பியான்ட் தி ஃபேரிடேல் எனும் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார் நயன்தாரா. அதில் அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நல்ல விஷயங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் இந்த ஆவண படத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இருந்து எந்த ஒரு காட்சிகளையும் இசையையும் பயன்படுத்த முடியாத வகையில் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: சூர்யா44 படம் இப்படிதான் இருக்கும்?!… பூஜா ஹெக்டே கொடுத்த அப்டேட்!… இதுலயாச்சும் தப்பிச்சிருவாரா?…

அதற்கு காரணம் தற்போது தனுஷ் தான் என்றும் தெரியவந்திருக்கிறது. நயன்தாரா வாழ்க்கையை மாற்றிய திரைப்படமாக நானும் ரவுடிதான் திரைப்படம் அமைந்தது. அதனால் இந்த ஆவணப்படத்தில் அந்தப் படத்தின் சில காட்சிகளையும் இசையையும் பயன்படுத்த அவர் விரும்ப அதற்கு தனுஷ் தடையில்லா சான்று கொடுக்காமல் கடந்த இரண்டு வருடமாக இழுத்து அடித்திருக்கிறார்.

நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பது அனைவருக்குமே தெரியும். அதனால் அவர்கள் தடையில்லா சான்று கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் தனுஷை குறிப்பிட்டு மிகவும் காட்டமாக நயன்தாரா எச்சரிக்கை விடுத்து இந்த ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: நீங்களாம் மனுஷனா? முகமூடியை போட்டுக்கிட்டு நடிக்காதீங்க… தனுஷை போட்டு பொளந்த நயன்..

இதில் விக்னேஷ் சிவனும் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விக்னேஷ் சிவன்  தனுஷை பின்தொடரும் தீவிரமான ரசிகர்களை கருத்தில் கொண்டாவது அவரின் போக்கு மாற வேண்டும்‘ என தன்னுடைய பதிவில் கூறி இருக்கிறார். யாரையும் வெறுக்க வேண்டாம். வாழு வாழ விடு .அன்பை மட்டுமே பகிருங்கள் என நடிகர் தனுஷ் பேசிய ஒரு வீடியோவையும் பகிர்ந்து தனுஷுக்கு அட்வைஸ் செய்து இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/DCbGRRfisAz/?igsh=MTJxMHN0MzQ2dmQ4Ng==