பிப்ரவரி 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காதலர்கள் சந்தித்து அன்பை பறிமாறிக்கொள்வது, காதலர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது, மலர் கொடுப்பது என காதலர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உலகம் முழுக்க காதலர்கள் இருந்தாலும் காதல் என்பதன் உணர்வு ஒன்றுதான். அம்ஜிக்கரை என்றாலும் அமெரிக்கா என்றாலும் காதல் ஒன்றுதான்..
எனவே, சமூகவளத்தளங்களில் பலரும் பலருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள காதலர் தின வாழ்த்து பலரையும் கவர்ந்திருக்கிறது.
உங்களின் கைகளை திறந்து பாருங்கள்.. அதில் ஒன்றும் இல்லை.. உங்கள் இதயத்தின் உள்ளே பாருங்கள்.. ஒரு உண்மையான காதல் இருக்கிறது.. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் உங்களை புதிதாக உணர வைக்கும் ஒருவர் உங்கள் மனதில் இருக்கிறார்..
அப்படியெனில் சந்தோஷமாக இருங்கள்.. நீங்கள் அரசர்களை விட பணக்காரர்கள்.. தேவதைகளால் ஆசீர்வதி ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்.. உலகம் உங்களை முத்தமிடும்.. காதலை நம்பும் எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்’ என பதிவிட்டு இருக்கிறார்.. அதோடு, மனைவி நயன்தாரா மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்களையும் அதில் பகிர்ந்துள்ளார்.
