லீக்கான கோட் படத்தின் முக்கிய காட்சி... விஜய் - பிரசாந்த் மோதல்.. என்னங்க இப்படி ஆச்சு?

by Akhilan |
லீக்கான கோட் படத்தின் முக்கிய காட்சி... விஜய் - பிரசாந்த் மோதல்.. என்னங்க இப்படி ஆச்சு?
X

Goat Movie: விஜயின் அடுத்த படமான கோட் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படக்குழுவுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம். இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் வேறலெவல் வில்லனாக நடித்த படங்கள்.. ஏழாம் அறிவு டாங்லீக்கே முன்னோடி கேப்டன்தானாம்!

டி ஏஜிங் தொழில்நுட்பத்தினை இப்படத்தில் வெங்கட் பிரபு பயன்படுத்த இருக்கிறார். மேலும் இப்படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

விஜயின் ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படம் வில் ஸ்மித்தின் ஜெமினி மேன் படத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கோட் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்து இருக்கிறார்.

இப்படம் விஜயின் கடைசி படமாகவோ, அதற்கு முந்தைய படமாகவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிவாஜியும் விஜயகாந்தும் இணைந்து நடித்த ஒரே படம்! 34 ஆண்டுகள் ஆகியும் மனதில் நிற்க காரணமே இதுதான்!

இதில் விஜய் மற்றும் பிரசாந்த் கோபமாக பேசி கொண்டு இருக்கின்றனர். கோட் படக்குழு ஷூட்டிங் பாதுகாப்பாக நடத்தியும் இப்படி நடந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறதாம். அந்த காட்சிகளை இணையத்தில் பகிர வேண்டாம் எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: ஜெயலலிதாவா?.. சரோஜாதேவியா?!.. ஏ.எம்.வீரப்பன் செய்த வேலையில் கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்…

Next Story