விக்கி உங்க அடுத்த படத்துல இது கண்டிப்பா இருக்கனும்! விஜய் டிவி புகழ் கோபிநாத் வைத்த கோரிக்கை

Published on: January 10, 2024
wikki
---Advertisement---

Vignesh Shivan: போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். முதல் படம் ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும் நானும் ரௌடிதான் படம் தான் அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. படமுழுக்க காமெடியை அள்ளி விசியிருப்பார்.

இந்தப் படத்தின் மூலம் தான் நயன்தாராவுடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாகி இன்று இருவரும் தம்பதிகளாக மாறியிருக்கிறார்கள். இவர்களுக்கு இரு ஆண்குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் நயன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ரைட்டு! தக் லைஃபில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை! திரிஷா ஆசையில மண்ணப்போட்டீங்களேப்பா!

சமீபத்தில் கூட அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பல விமர்சனங்கள் நயன்தாராவை பற்றி முன்வைத்தாலும் அதை எதையும் அவர் கண்டுகொள்வதே இல்லை. விஜயகாந்த் இறப்பிற்கு கூட அவர் அஞ்சலி செலுத்தப் போகவில்லை.

ஏன் அவர் நினைவிடத்திற்கு கூட இன்னும் அவர் போய் பார்க்கவில்லை. ஆனால் அதன் பிறகு நடந்த கலைஞர் விழாவில் கலந்து கொண்டார். இன்று சேலத்தில் நடக்கும் ஒரு தனியார் கல்லூரி விழா ஒன்றிற்கும் தன் கணவருடன் ஆஜராகியிருக்கிறார் நயன்தாரா. அவரின் ஃபெமினைன் ப்ராடக்ட் சம்பந்தமான பெண்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பாக நடத்தப்பட்ட அந்த விழாவிற்கு விஜய் டிவி புகழ் கோபிநாத்தும் சென்றிருந்தார்.

இதையும் படிங்க: ஊருக்கே தெரிந்த விஷயம் உனக்கு தெரியாதா? கருணாநிதியின் ரகசியத்தை மனைவியிடம் போட்டுக்கொடுத்த மனோரமா

அப்போது பேசிய கோபிநாத்  ‘நானும் ரௌடிதான் படத்தில் வாய் பேசமுடியாத தன்  மகளான நயன் குளித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய அப்பா சானிட்டரி நாப்கினை வெளியே வைத்துவிட்டு போவதும் அதை மிகவும் சங்கோஜப்பட்டுக் கொண்டு நயன் எடுப்பதும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

இனி அடுத்த படத்தில் ‘அப்பா எனக்கு சானிட்டரி நாப்கின் வேண்டும்’ என வாய் திறந்து கேட்கும் படி டையலாக்குடன் வையுங்கள். இனி காலம் அப்படித்தான் மாற வேண்டும் என கோபிநாத் கூறினார்.

இதையும் படிங்க: கமலுடன் நடிக்கும்போது கதறி அழுதேன்.. சினிமாவே வேண்டாம் என போய்விட நினைத்த சில்க் ஸ்மிதா…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.