dd55

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கிறார்.. வெறும் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் தனுஷ்.
இப்போதுள்ள இளம் நடிகர்களில் பல வேலைகளை செய்யும் திறமை கொண்ட ஆளுமையாக தனுஷ் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இட்லி கடை படத்திற்கு பின் போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். இந்த படம் தொடர்பான ஒரு வீடியோவும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த திரைப்படம் தனுஷின் 54ஆவது திரைப்படமாகும். அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள அவரின் 55வது திரைப்படத்தை அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார்.. இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. மிகவும் அதிக பட்ஜெடில் இந்த படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்கிற அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.. தனுஷின் படங்களுக்கு தொடர்ந்து ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்து வருகிறார். அதேபோல், ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார்.. எனவே இந்த படத்திற்கும் அவரே இசையமைப்பாளராக இருப்பார் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.