இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர் இசை அமைப்பாளர் தேவா. சில கடுமையான இயக்குனர்களிடம் வேலை பார்க்கவே முடியாது. ஆனால் அவர்களிடமும் அட்ஜெஸ்ட் பண்ணி பணியாற்றியுள்ளார் தேவா. எவ்வளவு பெரிய பொறுமைன்னு பாருங்க. புதுசா எந்த வாய்ப்பு வந்தாலும் வேணாம்னு சொல்ல மாட்டாராம். பணம் சம்பாதிக்கிறது வேற.
இந்த இடத்துக்கு வர்றதுக்குத் தானே, முட்டி மோதி வந்துருக்கோம். அதனால சின்ன டைரக்டர், பெரிய டைரக்டர்னு நினைக்கக்கூடாது. நாம இன்னைக்கு சின்ன டைரக்டர்னு நினைப்போம். ஆனால் அவன் தான் நாளைக்கு பெரிய டைரக்டர். அதனால யாரையும் குறைச்சி எடை போடக்கூடாது. நான் மியூசிக் பண்ணிக் கொடுத்துட்டுப் போறேன்னு சொல்வாராம் தேவா.
அப்படி ஒரு அற்புதமான மனிதர். தேவா வீட்டுல ஒரு விசேஷம். ஒவ்வொருவருக்கா திருமண பத்திரிகையை வைத்துள்ளார். அஜித்திடம் கொடுக்க நினைத்தார். ஆனால் எவ்வளவோ தொடர்பு கொள்ள முயன்றும் அவரை முடியவே இல்லையாம். அஜித்தின் மாமா பாபுவிடம் கூட போய்க் கேட்டுப் பார்த்தாராம் தேவா. ஆனாலும் முடியவில்லை. அப்போது அஜித் ஒரு கொள்கையோடு இருந்தார். பொதுவிழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதுதான் அது. ஆனால் தேவாவின் இசையில் அஜித்துக்கு 12 படங்கள் பண்ணிக் கொடுத்துள்ளார்.
அவை ஒவ்வொன்றும் சூப்பர்ஹிட். ஆசை படத்தின் பாடலை இன்று கேட்டாலும் செம ரகமாகத் தான் இருக்கும். இயக்குனர் வசந்திடம் வேலை பார்ப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. ஆசை படத்துக்கு டியூன் போடும்போது அடிக்கடி மாற்றச் சொல்வாராம். தேவாவின் ஆர்க்கெஸ்ட்கள் கூட அவரு இவ்ளோ டார்ச்சர் பண்றாரு. நீங்க ஏன் இப்படி எல்லாம் பொறுமையா இருக்கீங்க. முடியாதுன்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானேன்னு சொல்வாங்களாம்.
ஆனாலும் அதைக் கேட்காமல் பாட்டு நல்லா வரணும்னு அவர் மெனக்கிடுறாரு. அவருக்கு ஏத்த மாதிரி நாம கொடுப்போம்னு சொல்வாராம் தேவா. எனக்கு ரெண்டாவது படம். பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா. கணேசா நீ கருணை வச்சா நானும் ஹீரோப்பான்னு பாடல் வரிகள், பாடல்கள் எல்லாம் தேவாவின் கைவண்ணத்தால் உருவானவை. வாலி படம் ஒரு சூப்பர்ஹிட். மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி பாடல் பிஜிஎம் அஜித்துக்கு நல்ல பேரைக் கொடுத்தது. அப்படி ஒரு 12 படங்கள் அவருக்காக இசை அமைத்தார்.
ஆரம்பத்தில் வளர்ந்து வந்த நடிகர் தான் அஜித். பெயிலியர் படம் கொடுத்தவர். தயாரிப்பாளருக்கு நஷ்டம் கொடுத்தவர். ஆனாலும் நான் சாவு வீட்டுக்கு வர மாட்டேன். ஆடியோ லாஞ்சுக்கு வர மாட்டேன். இப்படி ஏன் ஈகோ? இதுல என்ன கொள்கை இருக்கு? உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் ஜனநாயகக் கடமை ஆற்ற ஓட்டு போட வர்றாரு.
அதே நேரம் மனிதாபிமானம்னு ஒண்ணு இருக்கு. நன்றி மறத்தல்னு ஒரு விஷயம் இருக்கு. நாம இந்த உயரத்துக்கு வந்துருக்கோம். அந்த சாங் இல்லன்னா, இசை அமைப்பாளர் இல்லனா, பாடல் இல்லன்னா அந்தப் படம் ஹிட் ஆகிருக்குமா? இது அஜித் பாட்டுடான்னு தான் சொல்றோம். அந்தளவு தேவா நல்ல மனிதர். அவரு சாவுக்குக் கூட வரல அஜித். நன்றி கெட்ட உலகமடான்னு சொல்கிறார் ஆதங்கமாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு.







