Cinema History
சிவாஜி கணேசனை இயக்க 19 வருடங்கள் காத்திருந்த பாலச்சந்தர்!. அட அந்த படமா!..
தமிழ் சினிமாவில் ஸ்டார்களை நம்பாமல் தனது கதையை மட்டுமே நம்பி கடைசிவரை திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிகரம். பாலச்சந்தர். மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோக்களின் பின்னால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஓடியபோது புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர். துவக்கத்தில் நாடகங்களை இயக்கி வந்தார் பாலச்சந்தர்.
இவர் திரைப்படங்களை இயக்க வந்த காலத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் பீக்கில் இருந்தனர். ஆனால், அவர்களை வைத்து படமெடுக்க வேண்டும் என பாலச்சந்தர் ஆசைப்பட்டதே இல்லை. அதேநேரம், எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதியவர் பாலச்சந்தர்தான். இப்படித்தான் சினிமாவில் நுழைந்தார் பாலச்சந்தர்.
இதையும் படிங்க: சிவாஜிக்கே நடித்து காட்டிய இயக்குனர்!.. கண்ணாடி முன்பு இரவு முழுவதும் பயிற்சி எடுத்த நடிகர் திலகம்!
பாலச்சந்தர் எழுதி இயக்கிய பல நாடகங்கள் பின்னாளில் சினிமாவாக மாறி இருக்கிறது. நாகேஷ் நடித்த சர்வம் சுந்தரம் படம் கூட பாலச்சந்தர் இயக்கிய நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி பக்கம் போகவில்லை என்றாலும் ஜெமினி கணேசன், ஜெய் சங்கர் ஆகியோரை வைத்து சில படங்களை இயக்கி இருக்கிறார்.
அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், தப்பு தாளங்கள், அவர்கள், சிந்து பைரவி என வித்தியாசமான கதைகளை சினிமாவாக எடுத்தவர் இவர். பாரதிராஜா பல புதுமக நடிகைகளை அறிமுகப்படுத்தியது போல பாலச்சந்தர் நிறைய நடிகர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். 100 படங்களுக்கும் மேல் இயக்கி சாதனை படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: 850 அடி.. ஒரே டேக்… நீண்ட வசனத்தை பொளந்து கட்டிய சிவாஜி!.. பிரமித்த தமிழ்த்திரை உலகம்!
பாலச்சந்தர் முதலில் பார்த்த சினிமா ஷூட்டிங் சிவாஜி கணேசன் முதன் முதலாக ஹீரோவாக நடித்த பராசக்தி படம்தான். அப்போது பாலச்சந்தருக்கு வயது 22. முதன் முதலில் பார்த்தது சிவாஜி பட ஷூட்டிங் என்றாலும் அவரை வைத்து படமெடுக்க பாலச்சந்தருக்கு 19 வருடங்கள் ஆனது.
1970ம் வருடம் சிவாஜி நடிப்பில் வெளியான ‘எதிரொலி’ என்கிற படத்தை இயக்கியிருந்தார் பாலச்சந்தர். இந்த படத்தில் சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, எஸ்.எஸ்.ஆர், மேஜர் சுந்தர்ராஜன் என பலரும் நடித்திருந்தனர். எதிரொலி படமே சிவாஜியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய முதல் மற்றும் கடைசிப்படமாக அமைந்தது.