Cinema News
பண்றதெல்லாம் பண்ணிட்டு ஆறுதல் சொன்ன ஜோதிகா.. ஏமாளியான சூர்யா?.. விளாசிய பயில்வான்!..
சூர்யாவின் இப்படிப்பட்ட நிலைமைக்கு நடிகை ஜோதிகா தான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருள் செலவில் தயாரித்திருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. படம் கட்டாயம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
படம் வெளியாகி தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை பெற்று வந்த காரணத்தால் படுதோல்வியை சந்தித்தது. படத்தின் கதை சரியாக இல்லை என்பதால் ரசிகர்கள் தொடர்ந்து படத்தை ட்ரோல் செய்து வந்தார்கள். ஆனால் இதில் சூர்யாவின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது. இந்நிலையில் சூர்யாவின் இந்த நிலைமைக்கு காரணம் ஜோதிகா தான் என்று பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறி இருக்கின்றார்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகளாக யாருமே செய்யாத சாதனை… தட்டித் தூக்கிக் கெத்து காட்டிய இளையராஜா
அவர் அதில் தெரிவித்திருந்ததாவது: ‘சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் தற்போது ஏழரை சனி நடந்து வருகின்றது. அதனால் இருவரும் கோயில் கோயிலாக சென்று வருகிறார்கள். சில வருடத்திற்கு முன்பு நடிகை ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கோயிலை பற்றி சர்ச்சையான விஷயங்களை பேசி இருந்தார். கோயிலுக்கு செலவு செய்வதை காட்டிலும் பள்ளிகளுக்கு செலவு செய்யலாம் என்று கூறியிருந்தார்.
அவர் பேசியதற்கான பலனை தான் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் சூர்யா தனது தந்தை சிவகுமாரை எதிர்த்து ஒற்றை காலில் நின்று ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பதற்கு தடை போடப்பட்ட நிலையில் பல ஆண்டுகாலம் வீட்டிலேயே அடங்கி கிடந்தார். ஆடியோ காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதால் சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார்.
இதற்கு சிவக்குமார் முதலில் தட போட்ட நிலையில் இந்த படத்தின் கதையில் நான் நடித்தால் தான் கரெக்டாக இருக்கும் என்று கூறி எப்படியோ சமாதானம் செய்து ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பல படங்களில் கமிட்டாகி சிவக்குமாரிடம் அனுமதி இல்லாமல் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் மட்டும் இருந்தால் சரி வராது பேன் இந்தியா நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக கணவர் சூர்யாவை அழைத்துக் கொண்டு மும்பை சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அதற்காக தனது மாமனார் மாமியாரிடம் குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டினார். மும்பை சென்றால் தான் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுக்க முடியும் என்று பேசி தனியாக சென்று விட்டார். மும்பை சென்ற பிறகு தனது இஷ்டத்துக்கு பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கினார் . இது சிவகுமாருக்கு பிடிக்காத காரணத்தால் ஜோதிகா மற்றும் சூர்யா குடும்பத்தினர் இடையே சிறிது விரிசல் ஏற்பட்டது.
ஜோதிகா தற்போது சென்னை வந்தால் கூட மாமனார் மாமியாருடன் பேசாமல் இருந்து வருகின்றார். மேலும் நடிகர் சூர்யாவின் திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட ஜோதிகா கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றால் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. ஒருவேளை இந்த படம் வெற்றி பெற்று விட்டால் தமிழிலேயே செட்டில் ஆகிவிடுவார் என்று யோசித்த ஜோதிகா தனது கணவரின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை போல.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கும் ஹாலிவுட் படத்துக்கும் இவ்ளோ ஒற்றுமையா? அப்படியே சுட்டுருக்காங்களே..!
அதன் பிறகு தனது கணவருக்கு ஆறுதல் கூறுகிறேன் என்கின்ற பெயரில் ஒரு அறிக்கையை தூக்கிக் கொண்டு வந்தார். தற்போது சூர்யாவை பாலிவுடில் செட்டில் செய்கிறேன் என்று கூறி அங்கேயே தங்க வைத்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் தற்போது கணவன் மனைவி இருவரும் கோயில் கோயிலாக சுற்றி வருகிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு எப்படியாவது படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்று சாமி தரிசனம் செய்தால் பரவாயில்லை.
படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்த பிறகு கோவில் கோவிலாக சென்று என்ன பிரயோஜனம் இருக்கின்றது. கண்கிட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம் இருக்கின்றது. எப்போது சூர்யாவுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமோ அப்போது எல்லாம் ஜோதிகா ஆறுதல் சொல்லாமல் தற்போது ஆறுதல் கூறி என்ன செய்யப் போகின்றார்’ என்று ஜோதிகாவை குறித்து பேசி இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன்