உதவி இயக்குநரா சேர்ந்த முதல் படத்துலேயே ஹீரோ சிவாஜி… யார் அந்த பிரபலம்?

சிவாஜி நடித்து 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ‘எழுதாத சட்டங்கள்’.

Sivaji Ganesan

தமிழ் சினிமாவில் ‘கண்ணத்தாள், திருநெல்வேலி, ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி, ஶ்ரீ பண்ணாரி அம்மன்’ போன்ற படங்களை இயக்கியவர் பாரதி கண்ணன். இவர் நடிகராகவும் பல படங்களில் முக்கிய ரோலில் வலம் வந்திருக்கிறார்.

சமீபத்தில், இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் கொடுத்த பேட்டியில் “நான் உதவி இயக்குநரா வொர்க் பண்ண முதல் படத்தோட ஹீரோவே நம்ம ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் சார் தான்.

படத்தோட பேரு ‘எழுதாத சட்டங்கள்’. K.சங்கர் சார் தான் எங்க டைரக்டர். ஆக்ச்சுவலா இது மலையாளத்துல சூப்பர் ஹிட்டான ‘ஆரம்பம்’-ங்குற படத்தோட ரீமேக் தான்.

சிவாஜி சார் வந்து இந்த படத்தோட கதையவே கேக்கல. அப்போ அவர் மலேசியாவுல இருந்தாரு. அவர் மேனேஜர் கிட்ட சொல்றாரு, டேய் நான் சென்னைக்கு வந்ததும் நடிக்கணும்டா, என்னால நடிக்காம இருக்க முடியலடா. கரெக்ட்டான கதையை ஓகே பண்ணி வச்சிருடான்னு சொல்றாரு.

இந்த நேரத்துல எங்க டைரக்டர் K.சங்கர் சார் ‘ஆரம்பம்’-ங்குற மலையாள படத்தை ரீமேக் பண்ணலாம்ன்னு சொன்னாரு. அப்போ எங்க ஆபிஸ்ல இருந்து தான் சிவாஜி சாரோட மேனேஜர், அவர்கிட்ட விஷயத்தை சொன்னாரு.

அதுக்கு சிவாஜி சார், மலையாளத்துல நல்ல படம் எடுப்பாங்க. அது நல்ல கதையா தான் இருக்கும் ஓகே பண்ணுன்னு சொல்லிட்டாரு. அப்புறம் மலேசியாவுல இருந்து வந்ததும், அந்த படத்துல அவர் நடிச்சாரு” என்று கூறியுள்ளார்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →