பொடிப்பையன் ரன்வீர் சிங்குக்கெல்லாம் துரந்தர் போல கதை அமையுது.. ரஜினியால் டர்ரான டான் டைரக்டர்!..

தீபிகா படுகோனை விட ரன்வீர் சிங் பாலிவுட்டில் ரொம்பவே மட்டமான நிலையில் தான் இருந்தார். ஆனால், துரந்தர் மற்றும் துரந்தர் 2 என இரு படங்களில் ஒட்டுமொத்தமாக 3000 கோடி வசூலை ஈட்டி ஷாருக்கான், அல்லு அர்ஜுன் ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டார். சமீபத்தில், லெஜண்ட் சரவணாவின் லீடர் படமே துரந்தர் அளவுக்கு செம மாஸான ஸ்பை படமாக உருவாகி இருந்தது. ஆனால், ரஜினிக்காக டான் பட டைரக்டர் சிபி சக்கரவர்த்தி சுட்டுக் கொடுத்த ஹாலிவுட் ரீமேக் படத்தின் கதை […]

r173

தீபிகா படுகோனை விட ரன்வீர் சிங் பாலிவுட்டில் ரொம்பவே மட்டமான நிலையில் தான் இருந்தார். ஆனால், துரந்தர் மற்றும் துரந்தர் 2 என இரு படங்களில் ஒட்டுமொத்தமாக 3000 கோடி வசூலை ஈட்டி ஷாருக்கான், அல்லு அர்ஜுன் ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டார்.

சமீபத்தில், லெஜண்ட் சரவணாவின் லீடர் படமே துரந்தர் அளவுக்கு செம மாஸான ஸ்பை படமாக உருவாகி இருந்தது. ஆனால், ரஜினிக்காக டான் பட டைரக்டர் சிபி சக்கரவர்த்தி சுட்டுக் கொடுத்த ஹாலிவுட் ரீமேக் படத்தின் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் துரந்தர் அளவுக்கு மாற்றிக் கொண்டு வா என ரஜினிகாந்த் உத்தரவிட, அய்யோ ஆளவிடுங்க சாமி என ஓடிவிட்டார் என்கின்றனர்.

தெலுங்கில் நானி படத்துக்கு டாட்டா காட்டிவிட்டு வந்த நிலையில், அங்கேயும் தயாரிப்பாளர்கள் 5 கோடிக்கு ஃபைன் போட்ட நிலையில், சிபி சக்கரவர்த்திக்கு மீண்டும் ஏழரை ஆரம்பித்துவிட்டதா? என கலாய்க்கின்றனர்.

சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யாவை வைத்து டான் எனும் படத்தை எடுத்து உருட்டிய சிபி சக்கரவர்த்தி சுமார் 4 ஆண்டுகளாக புதிய படத்தை ஆரம்பிக்காமல் இருந்து வந்த நிலையில், தலைவர் 173 படம் கிடைத்து விட்டதே என ஹேப்பியாக இருந்த அவருக்கு தற்போது ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

டிராகன் படத்தை எடுத்துவிட்டு சிம்புவுக்காக தவம் கிடைக்கும் அஸ்வத் மாரிமுத்து ஒரு வருடம் பார்ட்டி பண்ணிவிட்டு ஜாலியாக இருந்த நிலையில், அவருக்குத்தான் தலைவர் 173 படத்தை இயக்கும் ஜாக்பாட் கிடைக்கப் போகிறது என்கின்றனர். ரஜினிகாந்த் – கமல் படத்தின் ப்ரோமோவே வந்த நிலையில், இன்னமும் சிபி சக்கரவர்த்தி பட அறிவிப்பு வராத நிலையில், இனியும் வருமா? வராதா? என்று தெரியவில்லை.

CR
ஆசிரியர்

adminram

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →