Cinema News
சும்மா வரல சினிமாவுக்கு… அடேங்கப்பா ஜி.வி.பிரகாஷ்குமாரோட அனுபவத்தைப் பாருங்க…!
இசை அமைப்பாளர், பின்னணிப்பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு படங்களிலும் இசை அமைத்துள்ளார். டார்லிங் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். இவர் தனது பள்ளித் தோழியான சைந்தவியைத் தான் திருமணம் செய்துள்ளார்.
2013ல் திருமணம் செய்தனர். 2013ல் பிரிந்தனர். இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதாக செய்திகள் வலம் வந்தன. என்னன்னு பார்த்தால் தான் தெரியுது சங்கதி. அவர்கள் வேலை காரணமாகத் தான் இணைந்துள்ளார்கள்.
Also read: படம் பார்க்கும்போதே அந்த இயக்குனருடன் ஒர்க் பண்ணனும்னு ஆசை… SK.சொன்ன பிளாஷ்பேக்
ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி இருவரும் மணவாழ்க்கையில் பிரிந்து விட்டனர். சமீபத்தில் இருவரும் இணைந்து போஸ் கொடுத்து இருந்தது ரசிகர்களக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. என்னன்னு பார்த்தால் தான் தெரியுது. ஜி.வி.பிரகாஷ் மலேசியாவில் கச்சேரி நடத்த உள்ளாராம். அதில் சைந்தவியும் சேர்ந்து பாட உள்ளாராம்.
இதுகுறித்து சைந்தவியே வீடியோ வெளியிட்டு இருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது. விவாகரத்து ஆனாலும் புரொபஷனலாக சேர்ந்து பணியாற்றுவது என்பது பெரிய விஷயம். ஒருவருக்கொருவர் ஈகோவை விட்டுக் கொடுத்து விட்டு செய்யும் தொழிலைத் தெய்வமாகக் கருதி உள்ளார்கள்.
அப்படி எண்ணினால் மட்டுமே இதுபோன்ற காரியங்களில் ஈடுபட முடியும். இல்லாவிட்டால் சாதாரண தம்பதியர் போல பிரிந்தால் அவர்கள் பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டார்கள் என்பது போல ஆகி விடும்.
ஜி.வி.பிரகாஷ்குமார் வேறு யாருமல்ல. சமீபத்தில் பிரிந்த தம்பதியர் ஏ.ஆர்.ரகுமான் – சைரபானு. இவர்களில் ஏ.ஆர்.ரகுமானின் மருமகன் தான் ஜி.வி.பிரகாஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
நான் ரொம்ப பாரம்பரியமா இசையைக் கத்துக்கிட்டு வந்து இருக்கேன். 8வது கிரேடு கோல்டு மெடலிஸ்ட், வெஸ்டர்ன் கிளாசிக்கல் பியானோ கோல்டு மெடலிஸ்ட், கிளாசிக்கல் மியூசிக், இந்துஸ்தானி மியூசிக்னு படிச்சி இருக்கேன்.
லைட் மியூசிக்ல 1000 ஸ்டேஜ்ல வாசிச்சி இருக்கேன். இது இல்லாமல 6 மியூசிக் டைரக்டர்கிட்ட 40 படங்கள் அசிஸ்டண்ட்டா வேலை செஞ்சிருக்கேன். இதை எல்லாம் பண்ணிட்டு தான் நான் படம் பண்ணினேன் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.