அல்லு அர்ஜுன் படம் மிஸ்ஸானதுக்கான காரணத்தை சொன்ன SMS ராஜேஷ்!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் பண்ணவிருந்தார் இயக்குநர் ராஜேஷ்.எம்.

காமெடி ஜானரில் ‘சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தவர் தான் இயக்குநர் ராஜேஷ்.எம்.
இவர் இயக்கத்தில் ரெடியாகி இருக்கும் புதிய படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’. ஜீவா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளது.
சமீபத்தில், இயக்குநர் ராஜேஷ்.எம் கொடுத்த பேட்டியில் “‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்கு அப்புறமா நான் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் சாரை வச்சு ஒரு படம் பண்றதா இருந்துச்சு.

அல்லு அர்ஜுன் சாருக்கு கதை சொன்னேன். அவருக்கு பிடிச்சிருந்துச்சு. ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா சார் தான் அந்த படத்தை தயாரிக்கிறதா இருந்துச்சு. ஞானவேல் ராஜா சார் வந்து தமிழ், தெலுங்கு பைலிங்குவலா பண்ணலாம்ன்னு சொன்னாரு.
ஆனா, அந்த ஸ்கிரிப்ட் வந்து பைலிங்குவலுக்கு ஏத்த மாதிரி இல்ல. ஒன்னு தமிழ்ல பண்ணிட்டு தெலுங்குல டப் பண்ணலாம், இல்ல தெலுங்குல பண்ணிட்டு தமிழ்ல டப் பண்ணிக்கலாம்ன்னு நான் சொன்னேன். அப்புறம் அந்த படம் நடக்கல” என்று கூறியுள்ளார்.











