தலைவர் செம Fast!.. ஷூட்டிங்கில் பர்த்டே கொண்டாடிய ரஜினி!.. செம வீடியோ…

X

சினிமாவில் நடிக்கவந்து 50 வருடங்களை கடந்துவிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த 50 வருடங்களில் சினிமா மூலம் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு கலைனஞாக இருந்திருக்கிறார். தனது திரை வாழ்வில் பல வெற்றி, தோல்விகளை பார்த்த்திருக்கிறார். தோல்வி வந்தபோது திமிரி எழுந்து மேலே வந்திருக்கிறார். கருப்பு வெள்ளை, கலர், அனிமேஷன் என எல்லா ஃபார்மேட் சினிமாவிலும் நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஹால்விவுட் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார் ரஜினி.

சினிமாவில் 50 வருடமாக ஒருவர் ஹீரோவாக நடிப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. களம் தெரிய வேண்டும்.. ரசிகர்களின் மனம் புரிய வேண்டும்.. என்ன செய்தால் அவர்களுக்கு பிடிக்கும் என்பது தெரிய வேண்டும்.. இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால்தான் ரஜினி இப்போதும் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 12ம் தேதியான இன்று ரஜினி தனது 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே இன்று காலை முதலே அவருக்கு பல அரசியல் தலைவர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயிலர் 2 ஷூட்டிங் நடக்கும் இடத்தில் இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக் குழுவினருடன் ரஜினி தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோவை அப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Sun Pictures (@sunpictures)