பார்வையிலயே பவர்.. வலது பக்கம் 10 பேர் விழுவாங்க…. விஜய் குறித்து எஸ்.ஏ.சி பகிர்ந்த வைரல் தகவல்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். அவரது படங்கள் வெளிவந்தாலே திருவிழா கோலம்தான். சினிமா வியாபாரத்தில் ரஜினியையே முந்திவிட்டார் என்றூ கூறப்படுவது உண்டு. தற்போது அரசியல் கட்சி துவங்கி முழு நேர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய் வளர்ச்சியில் ஆரம்பகாலத்தில் அவ்ருக்கு துணையாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். தன் மகனுக்கு வெற்றி வேண்டும் என்பதற்காக விஜயகாந்தை அனுகியதாகட்டும், ஒவ்வொரு விசயத்திலும் கவனமாக காய் நகர்த்தி வந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து […]

vijay - sa chandrasekar

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். அவரது படங்கள் வெளிவந்தாலே திருவிழா கோலம்தான். சினிமா வியாபாரத்தில் ரஜினியையே முந்திவிட்டார் என்றூ கூறப்படுவது உண்டு. தற்போது அரசியல் கட்சி துவங்கி முழு நேர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் வளர்ச்சியில் ஆரம்பகாலத்தில் அவ்ருக்கு துணையாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். தன் மகனுக்கு வெற்றி வேண்டும் என்பதற்காக விஜயகாந்தை அனுகியதாகட்டும், ஒவ்வொரு விசயத்திலும் கவனமாக காய் நகர்த்தி வந்தார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து அவர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

விஜய்யின் கண்களுக்கு என்றுமே ஒரு பயங்கர பவர் உண்டு. ஒரு காட்சியில் அவர் குனிந்துவிட்டு நிமிர்ந்தார் என்றால், அவனது கண்கள் அப்படியே சிவந்து இருக்கும். அந்தப் பார்வையிலேயே அவ்வளவு வீரியம் இருக்கும் என்று பெருமையுடன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், உண்மையிலேயே விஜய் பத்து பேரை தனியாக நின்று அடிக்கக் கூடியவர் தான். அவர் சினிமாவில் பெரிய அளவில் பாப்புலர் ஆன பின்பு, நானும் அவரும் வெளியில் செல்லும்போது எங்களைச் சுற்றி பெரிய கூட்டம் கூடிவிடும்.

அந்தச் சமயங்களில் எனக்கு முன்னாடி வந்து கூட்டத்தை அவர் தள்ளுவார் பாருங்கள்.. அவரது பலத்தில் வலது பக்கம் பத்து பேர் விழுவார்கள், இடது பக்கம் பத்து பேர் விழுவார்கள். அந்த அளவுக்கு அவருக்கு உடல் பலம் அதிகம், அவர் ஒரு ஸ்ட்ராங்கான நபர்” என்று எஸ்.ஏ.சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →