சிக்மா விழாவிற்கு அப்பா வருவாரா? – சஞ்சய் சொன்ன பதில்
தமிழக முதல்வர் விஜய் மகன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படம் சிக்மா. லைக்கா புரொடெக்சன் தயாரித்துள்ள இந்த படத்தில்

தமிழக முதல்வர் விஜய் மகன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படம் சிக்மா. லைக்கா புரொடெக்சன் தயாரித்துள்ள இந்த படத்தில் சுதீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் மகன் இயக்கும் படம் என்பதால் இப்படம் மீது தமிழ் திரையுலகமே பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.
சிக்மா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நாளை (18ம் தேதி) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு விஜய் வருவாரா என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஜேசன் சஞ்சயிடம் உங்க அப்பா உங்க படத்தை புரமோட் செய்ய ஒரு நாளாவது வருவாரா? என்கிற நெறியாளர் கேள்வி எழுப்ப, என்னோட படத்தின் ரிலீஸுக்காக ரொம்பவே ஆர்வமாக அப்பா உள்ளார். ஆனால், புரமோஷனுக்கெல்லாம் அவர் வர தேவையில்லை. வரவும் மாட்டார். அவருக்கு இருக்கும் வேலை ரொம்பவே பெரிது. நான் என்ன பண்ணி வச்சிருக்கேன் என்பதை பார்க்க ரொம்பவே ஆர்வமாக உள்ளார் என சஞ்சய் பதில் கூறியுள்ளார். விஜய் தனது மகன் விழாவிற்கு வருவார் என பலரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் சஞ்சயின் பதில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.












