சாய்பல்லவி கூட SK நடிப்பதில் சிக்கல்… பிரபலம் சொல்லும் புதுத்தகவல்

Published on: November 24, 2024
sk saipallavi
---Advertisement---

சிவகார்த்திகேயனைப் பொருத்த வரை நான் தான் அடுத்த ரஜினின்னு சொல்லல. ஆனா நான் தான் அடுத்த விஜய் என்று சொல்வது போல ஒரு பிம்பம் உருவாகி இருக்கிறது. ஏன்னா விஜய் தான் அரசியலுக்கு வந்துருக்காரு. கோட் படத்துல கையில துப்பாக்கியைக் கொடுத்துட்டாரு. சிவகார்த்திகேயனைத் தூக்கி விட அரசியல் பின்புலமும் செயல்பட்டுக்கிட்டு இருக்கு.

சிவகார்த்திகேயனை நாம் நகைச்சுவை கதாநாயகனாகத் தான் பார்த்திருக்கோம். அவர் மாற்றலாம்னு தொடர்ந்து முயற்சித்தார். அமரன் படத்தில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். அந்தக் கதாபாத்திரம் நகைச்சுவை காட்டினால் அடிபட்டுப் போகும்.

Also read: படம் குப்பை.. சூர்யாவை ஏன் திட்டுறீங்க? கொந்தளித்த அஜித்தின் நலம் விரும்பி

சாய்பல்லவி அமரன் படத்தில் பேசப்பட்டார்கள். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் அமர்க்களமாக இருந்தது. படத்தின் வெற்றிக்கு அவரது பங்கு மிக முக்கியமாக இருந்தது. சாய்பல்லவியின் நடிப்பைப் பார்த்து சிவகார்த்திகேயன் பயந்துருக்கணும். நடிப்பா உண்மையான்னு இல்லாம அச்சு அசலா இந்து ரொபேக்காவாகவே பண்ணி இருப்பார்.

சாய்பல்லவி அசால்டா சிவகார்த்திகேயனைத் தூக்கி சாப்பிட்டுருப்பாங்க. சமீபத்தில் வரும் அமரன் போஸ்டர்ல சாய்பல்லவி படமே இல்லாம இவர் படத்தை மட்டும் போட்டு வெளியிடுறாங்க. ரஜினியைக் கதாநாயகனாக்க சிவகுமார், ஜெய்சங்கரை வில்லனாக்குனாங்க.

அதே மாதிரி சிவகார்த்திகேயனை ஹீரோவாக்க விஷால், ஜெயம்ரவியை வில்லனாக்க கேட்டுக்கிட்டு இருக்காங்க. சாய்பல்லவி கூட இனிமேல் சிவகார்த்திகேயன் நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது. ஏன்னா சாய்பல்லவி வர்ற இடங்களில் சிவகார்த்திகேயனின் நடிப்பு காணாமல் போகிறது.

Amaran
Amaran

சாய்பல்லவி தான் உச்சம் தொடுகிறார். அதனால இனிமேல் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி கூட நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Also read: ilaiyarajaCinema Historyமூடு சரியில்லாம இருந்த இளையராஜா… இயக்குனர் சொன்ன வார்த்தை… கிடைத்ததோ சூப்பர்ஹிட் ரஜினி பாடல்!

சிவகார்த்திகேயன் அடுத்த விஜய் ஆவாருன்னு பார்த்தா சாய்பல்லவி கூடவே நடிக்க திணறுவாருன்னு சொல்ற இந்த விஷயம் படத்தைப் பார்த்தால் நல்லாவே தெரியுமாம். அந்த வகையில் படத்தில் ஸ்கோர் செய்து இருப்பது சிவகார்த்திகேயனை விட சாய்பல்லவியும், ஜி.வி.பிரகாஷூம் தான் என்கிறார் ஆலங்குடி வெள்ளைச்சாமி.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.