கட்சியின் பெயரை மாற்றப் போகும் தளபதி விஜய்… ரஜினியே ஆதரவாம்!.. இவர் சொல்வதை கேளுங்க!..

Published on: February 5, 2024
Rajni, Vijay
---Advertisement---

நடிகர் விஜய் அரசியலில் இறங்கி கட்சியின் பெயரை அறிவித்ததுமே பலவகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவரது கட்சியின் செய்தி தொடர்பாளர் ராம்குமார் இதுகுறித்து என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்ததுமே 80 சதவீதம் வரை பாசிடிவான விமர்சனங்கள் தான் வந்தன. இதில் க் ஒரு பிரச்சனையாக இருந்தது. வரும் நாள்களில் அதையும் சரி செய்து விடுவோம்.

விஜய் பல வருடங்களாக பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அதனால் அதற்கெல்லாம் தளபதி அஞ்சுவதில்லை. எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் பயங்கரமான பதில் எல்லாம் இருக்கு. 3 பக்க அறிக்கை விட்டதில் இருந்து நாடுமுழுவதும் அதைப் பற்றித் தான் பேசுகிறார்கள். சோஷியல் மீடியாவோட பங்கு கொஞ்சம் தான். ஆனால் மக்கள் மத்தியில் களத்தில் இறங்கி அவர்களுக்கான வேலைகளை எல்லாம் செய்தால் தான் அரசியலில் நிலைக்க முடியும்.

Ramkumar
Ramkumar

இப்போது எல்லாம் ஐடி விங்க் திட்டுறதுக்குத் தான் ஓப்பன் பண்றாங்க. களத்தில் நடக்கக்கூடிய பல விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கறதுக்குத் தான் அதை வைத்திருக்கிறோம்.

ஏ டீமோ, பீ டீமோ கிடையாது. விஜய் எல்லாருக்குமான தலைவன். எங்க டீம் மக்கள் டீம். மக்களின் பக்கம். மக்களும் அவருக்காகத் தான் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. பல இடங்களிலும் கட்சி பேரு நல்லா இருக்குன்னு சொல்றாங்க. விஜய் நடித்த முதல் படமும் வெற்றி தான். அவரோட கட்சி பேரும் வெற்றி தான். அவரது சினிமா பயணத்திலும் தொடர் வெற்றி. அரசியலிலும் அந்த வெற்றி கிடைக்கணும்னு பல பேர் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்திக்கிட்டு இருக்காங்க…

அரசியல் வாழ்க்கையையும் வரவேற்ற சூப்பர்ஸ்டார் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளாராம். பாலசந்தரே விஜய் திரையுலகையே ஆளப்போகிறான் என அப்போதே கணித்து சொல்லி விட்டாராம். மக்கள் மத்தியில் அவரது முகத்தைப் பார்த்தாலே போதும். விஜயைக் கொண்டாடுவார்கள். பெண்கள் மத்தியிலும் அவருக்கு பெரும் வரவேற்பு உண்டு. அதனால் இவை எல்லாமே ஓட்டுகளாக நிச்சயம் மாறும்.

மேற்கண்ட தகவலை விஜய் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.