ராம் இயக்கும் அடுத்த படம் இந்த ஜானரா?… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

ராம் இயக்கியுள்ள புதிய படமான ‘ஏழு கடல் ஏழு மலை’ வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகிறது.

Director Ram

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து படம் பண்ணிக் கொண்டிருப்பவர் தான் இயக்குநர் ராம். ஜீவாவை வைத்து இவர் பண்ண முதல் படம் ‘கற்றது தமிழ்’.

இதை அடுத்து ‘தங்க மீன்கள்’ படத்தில் இவரே கதையின் நாயகனாக நடித்தார். அடுத்து வசந்த் ரவியை வைத்து ‘தரமணி’, மலையாள நடிகர் மெகா ஸ்டார் மம்மூட்டியை வைத்து ‘பேரன்பு’, மிர்ச்சி சிவாவை வைத்து ‘பறந்து போ’ ஆகிய படங்களை இயக்கினார் ராம்.

இவர் இயக்கத்தில் ரெடியாகி இருக்கும் லேட்டஸ்ட் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

நேற்று இதன் ப்ரீ-ரிலீஸ் ஃபங்க்ஷன் நடைபெற்றது. இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி, இயக்குநர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது இயக்குநர் ராம் பேசுகையில் “நான் அடுத்து ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் ஒரு படம் பண்ணப் போறேன். அதுக்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கப் போறாரு” என்று அறிவித்துள்ளார்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →