ராம் பண்ண அந்த விஷயம் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுச்சு – ஸ்ரீகர் பிரசாத்!
இயக்குநர் ராம் இயக்கிய முதல் படம் ‘கற்றது தமிழ்’.

நடிகர் ஜீவா – இயக்குநர் ராம் காம்பினேஷனில் 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ‘கற்றது தமிழ்’. இதில் அஞ்சலி தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தமிழில் கல்ட் கிளாசிக் படங்களின் லிஸ்ட் எடுத்தால் அதில் நிச்சயம் ‘கற்றது தமிழ்’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. இயக்குநர் ராமுக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா, எடிட்டராக பணியாற்றியவர் ஶ்ரீகர் பிரசாத்.
சமீபத்தில், எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் கொடுத்த பேட்டியில் ‘கற்றது தமிழ்’ குறித்து பேசுகையில் “தமிழ்ல எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் ராம் தான். அவருக்கு ‘கற்றது தமிழ்’ தான் ஃபர்ஸ்ட் படம்.

அவர் என்கிட்ட வந்து ஸ்கிரிப்ட் சொல்லும்போதே தெரிஞ்சது, இது வந்து ரொம்ப வித்தியாசமான படம். அதே சமயத்துல hard-hitting-ஆ இருந்துச்சு. அந்த டைம்ல இந்த மாதிரி படம்லாம் கொஞ்சம் digest பண்றதே கஷ்டம்ன்னு தெரிஞ்சது.
இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சு போய் தான் ஓகே சொன்னேன். வொர்க் பண்ணும்போது, அவர் என்ன என்கிட்ட சொன்னாரோ, அதை அப்படியே விஷுவலா கொண்டு வந்தாரு.
பல இயக்குநர்கள் கிட்ட நான் வொர்க் பண்ணியிருக்கேன். அவங்க ஸ்கிரிப்ட்ல இருக்குறதுல ஒரு 75% ஷூட் பண்ணிட்டு வந்தாலே அது பெரிய விஷயம். ஆனா, ராம் வந்து சொன்னத அப்படியே எடுத்துட்டு வந்தது என்ன ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுச்சு” என்று கூறியுள்ளார்.












