கமலை வைத்து வித்தியாசமான படங்கள் பண்ண நினைச்சேன் – சந்தான பாரதி!

கமலை வைத்து இரண்டு படங்களை இயக்கினார் சந்தான பாரதி.

Kamal Haasan Santhana Bharathi

தமிழில் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காவலுக்குக் கெட்டிக்காரன், சின்ன மாப்ளே, வியட்நாம் காலனி’ போன்ற படங்களை இயக்கியவர் தான் சந்தான பாரதி. இவருடைய இயக்கத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இரண்டு படங்களில் நடித்தார்.

ஒன்று ‘குணா’. சைக்கலாஜிக்கல் ரொமான்டிக் டிராமா ஜானர் படமான இது 1991-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இன்னொரு படம் ‘மகாநதி’. க்ரைம் டிராமா ஜானர் படமான இது 1994-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

சமீபத்தில், இயக்குநர் சந்தான பாரதி கொடுத்த பேட்டியில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் குறித்து பேசுகையில் “‘குணா’ படம் வந்து எனக்கு கிடைக்கும்ன்னு நான் நெனச்சே பாக்கல.

ஏன்னா, அந்த படத்தை முதல்ல வேற ஒரு டைரக்டர் தான் இயக்குறதா இருந்துச்சு. அப்புறம் என்ன பிரச்சனை ஆச்சுன்னு எனக்குத் தெரியல, அவர் அந்த படத்தை பண்ணலன்னு சொல்லிட்டு போயிட்டாரு. அதுக்கப்புறமா திடீர்ன்னு ஒரு நாள் கமல் ஆபிஸ்ல இருந்து போன் பண்ணி வர சொன்னாங்க, போனேன்.

கமல் இந்த படத்தை நீங்க பண்ணுங்கன்னு சொன்னாரு. நான் ஓகேன்னு சொன்னேன். ஏன்னா, ஆரம்பத்துல இருந்து எனக்கும் கமலை வச்சு ஏதாவது வித்தியாசமான படங்கள் பண்றதா இருந்தா தான் பண்ணனும், இல்லேன்னா பண்ண வேண்டாம்ன்னு தான் வித்தியாசமான கதைக்காக வெயிட் பண்ணிட்டே இருந்தேன்.

கரெக்ட்டா ‘குணா’ வந்துச்சு, சந்தோஷமா பண்ணுனேன். அதே மாதிரி தான் ‘மகாநதி’ படமும். நானா போய் வாய்ப்பு கேக்கல. அந்த படத்தோட தயாரிப்பாளர் ராஜ்கண்ணு வந்து, கமல் சார் இந்த படத்தை உங்கள டைரக்ட் பண்ண சொன்னாருன்னு என்கிட்ட சொன்னதும் நான் ஓகே பண்றேன்னு சொல்லித்தான் அதுவும் பண்ணேன்” என்று கூறியுள்ளார்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →