Suriya Jyotika : சூர்யா – ஜோதிகா ரீமேரேஜ்!.. செம க்யூட்.. வைரல் போட்டோஸ்!..

சூர்யா ஜோதிகா தங்களின் திருமண விழாவை கொண்டாடிய புகைப்படங்கள்…

jyotika suriya

பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் ஒன்றாக நடிக்க தொடங்கினர். திரையில் இருவரின் ஜோடி பொருத்தம் பார்ப்பதற்கு நன்றாக இருந்ததாலும், ரசிகர்களுக்கும் அது பிடித்திருந்தாலும் தொடர்ந்து பல இயக்குனர்கள் சூர்யா – ஜோதிகா இருவரையும் வைத்து படமெடுக்க துவங்கினர்.

அப்படி வெளியான காக்க காக்க உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. ஒரு கட்டத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினார்.

மேலும், நான்கரை வருடங்கள் காத்திருந்து பெற்றோரின் சம்மதத்தோடு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவ் என்கிற மகனும் தியா என்கிற மகளும் உள்ளனர்.

இந்நிலையில்தான் திருமணமாகி 20 வருடங்கள் ஆகிவிட்டது கொண்டாடும் வகையில் சமீபத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் வெளிநாட்டில் அதை சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி சூர்யாவும், ஜோதிகாவும் வாக்குறுதி அளித்து மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைகளில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →